பக்கம்:சைவ சமயம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 6ð) 3F 6) j öf- [ f)ti J வரலாறு

சாதி வேறுபாடுகள் வற்புறுத்தப்பட்டன. பொது மக்களுடைய உள்ளங்களைக் கவருவதற்காக ஆடல் பாடல்களைக் கொண்ட பக்திநெறி ஏற்பட்டது. இந்தப் பக்தி நெறி தென்னுட்டிலும் பரவத் தொடங்கியது. பாசுபதம், லகுலீச பாசுபதம், காபாலிகம், மாவிரதம், சக்தி வணக்கம், குமரனை வழிபடும் கெளமாரம் முதலியன தென்னுட்டில் பரவின. இவையனைத்தும் சைவ சமயத்தின் உட் பிரிவுகளாகக் கொள்ளப்பட்டன. ஏறத்தாழக் கி. பி. 400-500 கால எல்லைக்குள் செய்யப்பட்ட தாகக் கருதப்படும் திருமூலர் திருமந்திரத்திலும் இவை இடம் பெற்றன. 'விரிசடை அந்தணர் விரதிகள் பாசுபதர்

  • காபாலிகர் தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே" என்று கி. பி. 7-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த அப்ப ரும் இவர்களைக் குறிப்பிட்டுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மாருள் இப்பலவகைச் சைவரும் காணப்படுகின்றனர். -

கி. பி. 7-ஆம் நூற்ருண்டு முதல் 9-ஆம் நூற் ருண்டு வரை இப் பக்திநெறி தமிழகத்தில் பெரு வெள்ளமாகப் பரவியது. கோவில்கள் மிகப் பல வாகத் தோன்றின. ஆடலும் பாடலும் மக்கள் உள்ளங்களைக் கொள்ளே கொண்டன. திகம்பர சமணமும் பெளத்தமும் நாட்டில் செல்வாக்கை இழந்தன. சைவரைப் பின்பற்றியே வைணவ ஆழ்வார்களும் பக்திநெறியைப் பரப்பினர். பல்லவ் வேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தம் இரு கண்களாகக் கருதி வளர்த்துவந்தனர். அழிந்து விடக்கூடிய மண், மரம், செங்கல், சுண்ணும்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/135&oldid=678277" இலிருந்து மீள்விக்கப்பட்டது