பக்கம்:சைவ சமயம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഞ8ഖ சமயம் 135

அழைத்துச் செல்கிறது; இன்றளவும் வழக்கில் உள்ள மிகப்பழைய சமயமாக விளங்குகிறது,' என்று வியப்பும் மகிழ்வும் பொங்கக் கூறியுள்ளார்.* சங்க காலத்தில்

சங்க காலத்தில் சிவன் - ஆலமர் செல்வன், முக்கண்ணன், பெருந்தேவன் முதலிய பல பெயர் களால் வழிபடப்பட்டான். சங்க காலக் கடவுளர் வரிசையில் சிவனே முதலிடம் பெற்று விளங்கி ஞன் என்பதைச் சிலப்பதிகாரம் மணிமேகலை மதுரைக் காஞ்சி இவற்ருல் அறியலாம். முருக வணக்கமும் கொற்றவை வழிபாடும் இருந்தன.

சங்க காலத்தை அடுத்த முதற் பல்லவர் காலத் தில் கோப்பெருஞ்சோழன் ஏறத்தாழ எண்பது சிவன் கோவில்களைக் கட்டினன் என்று தேவாரம் கூறுகிறது. பக்தி நெறி

வட இந்தியாவில் புத்தர் காலம் முதல் குப்தர் ஆட்சி வரையில் பெளத்த சமயமே செல்வாக் குடையதாயிருந்தது. குப்தர்கள் சைவ வைணவ மதங்களைப் போற்றி வளர்த்தனர். ஆதலால் அக் காலத்தில், அதுகாறும் பல நூற்ருண்டுகளாகக் கூறப்பட்டுவந்த செவிவழிச் செய்திகளெல்லாம் புராணங்களாக வடமொழியில் எழுதப்பட்டன. * “Among the many reveltions that Mohenjo-Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history &oing back to the chalcolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the worl.” —Sir

John Marshall in his preface to ‘Mohenjo-Daro and the Indus Civilization.' vol. I. p. vii.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/134&oldid=678276" இலிருந்து மீள்விக்கப்பட்டது