பக்கம்:சைவ சமயம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சைவ சமய வரலாறு

இரண்டு மான்கள் இருக்கின்றன. சிவபிரான் யானைத்தோலைப் போர்த்தவர், புலித்தோலை அரை யில் கட்டியவர், எருதினை ஊர்தியாகக்கொண்டவர், மானை ஏந்தியவர் என்ற நூற்கருத்துக்களை நோக்க, யோகியின் உருவம் சிவனைக் குறிப்பதாகலாம் என்று கூறுதல் பொருத்தமாகும். அந்த யோகி யின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் இருக்கின்றன. இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் தல்வரான் சர் ஜான் மார்ஷல், “இவ்வுருவம் சிவனைக் குறிப்பது” என்று கூறி யுள்ளார். யோகியை அடுத்து விலங்குகள் இருத் தல், சிவன் - பசுபதி என்பதைக் குறிக்கின்றது. மூன்று தலைகள் முன்பு தெரிவதால் பின்புறம் இரண்டு தலைகள் இருத்தல் கூடும் என்று அறிஞர் கூறுகின்றனர். #

சிந்து வெளியில் விலங்கு வணக்கமும் காணப் படுகின்றது. நந்தி வணக்கம் சிறப்பிடம் பெற்ற தென்று கூறலாம். ஒரு கோவில் முன் நந்தி நிற் பது ஒரு முத்திரையில் குறிக்கப்பட்டுள்ளது. சிந்து வெளி மக்கள் சிறந்த வணிகர்கள். அவர்களுக்கு எருது மிகவும் பயன்பட்டது. அதனுல் எருது வணக்கத்திற்குரிய பொருளாக மாறியிருக்கலாம். பின்னர் நாளடைவில் எருது வணக்கம் லிங்க வணக்கத்தோடு இணைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவை அனைத் தையும் ஒன்றுபடுத்திப் பார்த்த சர் ஜான் மார்ஷல் என்ற அறிஞர், “சிந்து வெளியிற் கிடைத்த புதுமைகளுள் முதலிடம் பெறத்தக்கது சைவத் தின் பழமையேயாகும். அது மாக்கல் காலம் அல்லது அதனினும் முற்பட்ட காலத்திற்கு நம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/133&oldid=678275" இலிருந்து மீள்விக்கப்பட்டது