பக்கம்:சைவ சமயம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சைவ சமய வரலாறு :

சிந்து வெளியில்

சிவநெறி அல்லது சைவ சமயம் என்பதை நினைக்கும்போது சிவநெறிக்கே உரிய லிங்க வழி பாடு நினைவிற்கு வருகின்றது. இந்தியாவிலும் எகிப்திலும் மால்ட்டா முதலிய தீவுகளிலும் சிறி யனவும் பெரியனவுமான சிவலிங்கங்கள் பல புதை பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. இந்தியா வில் மிகப்பழைய நாகரிக நகரங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் மொஹெஞ்சொ தரோ, ஹரப்பா முதலிய இடங்களில் பல லிங்கங் கள் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600-க்கு மேற்பட்ட சிறு லிங்கங்கள் கிடைத்துள்ளன. பண்டை மக்கள் இச்சிறிய விங்கங்களைத் தாயித்து கள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டியிருந் திருக்கலாம். - -

சிந்து வெளியில் கிடைத்த ஒரு முத்திரையில், மூன்று முகங்களைக்கொண்ட மனித உருவம் ஒன்று யோகத்தில் அமர்ந்திருப்பது போன்று காணப் படுகின்றது. அதன் மார்பில் முக்கோண வடிவத் தில் அமைந்த பதக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும், இடப்புறம் எருதும் கா ண் டா மி ரு க மு. ம் நிற்கின்றன. யோகியின் பீடத்திற்கு அடியில் * இது திண்டுக்கல் அருள் நெறித் திருக்கூட்டத்தில்

(1-5-55) அபிராமி அம்மன் கோவிலிற் பேசப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/132&oldid=678274" இலிருந்து மீள்விக்கப்பட்டது