பக்கம்:சைவ சமயம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சித்தாந்த சாத்திரங்கள்

விளக்குவது ; கலிவெண்பாவினுல் ஆனது; 129 கண்ணிகளை உடையது. தசாங்கம் விரித்துரைக்கும் பகுதி படித்து இன்புறத் தக்கது. ஞானசிரியன் பாசநீக்கம் செய்யும் திறத்தினை விளக்கும் பகுதி குறிக்கத்தக்கது. 7. உண்மைநெறி விளக்கம்

இது தத்துவருபம், தத்துவக் காட்சி, தத்துவ சத்தி, ஆன்ம வடிவம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவருபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவ போகம் என்னும் பத்துக் காரியங்களை இனிது விளக்கும் நூல். இத் தசகாரியம் பற்றிய குறிப் புக்கள் முன் சொன்ன சிவப்பிரகாசத்தில் உள் ளன. அவற்றின் விரிவே இந்நூலாகும். 8. சங்கற்ப கிராகரணம் .

இது அகச் சமயங்கள் பலவற்றின் கொள்கை களைக் கூறி, அவற்றைச் சித்தாந்தப் பார்வையால் மறுக்கும் நூல், சிவஞான சித்தியார் . பரபக்கமும் இந்நூலும் சித்தாந்த சைவத்தின் வேருன சமயக் கொள்கை வேறுபாடுகளை அறிதற்கு மிகவும் பயன்படுகின்றன. நிமித்த காரண பரிணும வாதி சங்கற்பத்தில் அப்பர், சம்பந்தர் தம் திருப்பதி கங்கள், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்பன எடுத் தாளப்பட்டன. சைவசித்தாந்த நிலையே பல்லாற்ரு னும் மிகச் சிறந்தது என்பதை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/131&oldid=678273" இலிருந்து மீள்விக்கப்பட்டது