பக்கம்:சைவ சமயம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 131

சிவானுபவம் ஈந்த குருவைப் பஃருெடை வெண்பா வால் வாழ்த்திய நூலாகும். இறைவனது பரநிலை யும் அவனது பொதுநிலையாகும் ஐந்தொழில் நடத் தும் திறமும், உயிர்களை மறைத்துநிற்கும் ஆண வத்தின் இயல்பும், அதனை ஒழிக்கவேண்டி இறை வன் சேர்க்கும் மாயை காரியமாகும் உடற்கருவிகள், போகங்கள், உலகங்கள் இவற்றின் பேருதவியும், உயிர்கள் கர்ப்பவாசத்திலும் துன்புறும் துன்பநிலை களும், பிறகு வினைக்கு ஈடாக நேரும் மறுமைப் பயன்களும், பின்னைப் பிறவிகளில் கூடிய இருவினை யொப்பு முதலிய பக்குவ நிலைகளும், இறைவன் மூவகை உயிர்கட்கு அருளும் திறமும், உயிர்கள் சிவஞானம் பெற்றுச் சரியை முதலிய நெறிகளில் ஒழுகி அடைந்த சிவப்பேற்றின் நிலையும், நாமே பிரமம்” என்பதன் இழிவும், சைவசித்தாந்த முத்திப் பெருநிலையும் முறையாக நன்கு விளக்கப்பட் டுள்ளன.

5. கொடிக்கவி t

இது மிகச் சிறிய நூல்; நான்கு வெண்பாக் களால் ஆகியது. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்ற பகுதி இன்புறத்தக்கது. ஐந்தெழுத் தின் நுட்பம் இறுதி வெண்பாவிற் குறிக்கப்பட்டுள் ளது. இது தில்லையிற் கொடியேறும் பொருட்டுப் பாடிய நூலாதலின், கொடிக்கவி' எனப்பெயர் பெற்றது. 6. நெஞ்சுவிடுதூது

இஃது ஆசிரியர் தமது உள்ளத்தை மறை ஞான சம்பந்தர்பால் மாலை வாங்கும்படித் துாதுவிடு முகத்தால் பல நூல்களின் பொருள் முடிபையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/130&oldid=678272" இலிருந்து மீள்விக்கப்பட்டது