பக்கம்:சைவ சமயம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 139

அமர்த்தப்பட்டனர். ஆடல் பாடல்களுக்காக நானூறு பதியிலார் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கோவிலிலும் விழாக்கள் நடைபெற்றன; சைவ சமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக் கப்பட்டன. சைவசித்தாந்த சாத்திரங்களான சிவஞான போதம் முதலிய நூல்கள் தோன்றின. கோவில்களை அடுத்து மடங்கள் இருந்து சமயக் கல்வியை வளர்த்து வந்தன. அம்மடங்களில் யாத் திரிகர் உண்பிக்கப்பட்ட னர். பெரிய கோவில்களில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலயங்கள் இருந்தன. பெரிய கோவில்களில் மருத்துவ மனை களும் அமைந்திருந்தன. அவற்றில் அறுவை மருத்துவரும் (Surgeon), நோய் மருத்துவரும் (Physician), 35T off tor(5th (Nurses) @(5.5′5surf. மருந்து வகைகளைக் கொண்டுவருவோரும், அவை களைப் பக்குவம் செய்வோரும் இருந்தனர். கோவில் மண்டபங்களில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் வளர்க்கப்பட்டன. சிற்ப ஓவியக் கலைகள் கோவில்களில் வளர்ச்சி பெற்றன. கோவிலுக்குள்ளேயே ஊராட்சி மன்றமும் நடை பெற்றது. ஊரில் பஞ்சம் ஏற்பட்டு நாட்டு மக்கள் நலியும்பொழுது கோவிலில் உள்ள பொன் வெள்ளி நகைகளும் பாத்திரங்களும் உருக்கி ஊரார்க்குக் கடனுகத் தரப்பட்டது என்று ஆலங்குடிக் கல் வெட்டுக் கூறுகின்றது. இத்தகைய முறைகளால் கோவில் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலைக்களஞய் இருந்து வந்தது. அரசன் முதல் ஆண்டி ஈருக அனைவரும் கோவிலைத் தம் உயிராக மதித் தனர். கோவில் ஊர் நடுவிலே அமைந்து மக்களைத் தன்வயப்படுத்திவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/138&oldid=678280" இலிருந்து மீள்விக்கப்பட்டது