பக்கம்:சைவ சமயம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சைவ சமய வரலாறு

சமயத்தின் உயிர்நாடி ஆட்டம்

இவவாறு சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஆளுல் சைவத்துள் சாதி வேறுபாடுகள் தோன்றி வளர்ந்து வயிரம் பாய்ந்துவிட்டன. சமுதாயத்தில் பல சாதிகளுக்குப் பல உரிமைகள். மறுக்கப்பட்டன. செருப்பு அணிந்துகொண்டு தெருவில் நடக்கச் சில சாதிகளுக்கு உரிமையில்லை. மாடிவீடு கட்டிக்கொள் ளச் சில சாதிகளுக்கு உரிமையில்லை. சில சாதியர் இவ்வளவு தூரத்தில் நின்று பேசவேண்டும், சிலர் இவ்வளவு தூரத்தில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற வரையறைகள் ஏற்பட்டன. இக்கொடுமை கள் எல்லாம் பல கோவில் கல்வெட்டுக்களில் காண லாம். இக்கொடுமைகளால் சைவ சமுதாயம் வலிமை குன்றியது; மன ஒற்றுமை அகன்றது.

இந்தப் பரிதாப நிலையில் கி. பி. 14-ஆம் நூற் ருண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் படை யெடுப்புத் தென்னுட்டில் நடந்தது. புகழ்பெற்ற மீளுட்சியம்மன்கோவில் கருவறைமட்டும் தப்பியது. எஞ்சிய கோபுரங்களும் திருச்சுற்றுக்களும் தரை மட்டமாக்கப்பட்டன. பெருங்கோவில்களில் இருந்த நகைகளும் பிறவும் கொண்டு செல்லப்பட்டன. நாடாண்ட பாண்டியன், மக்களை நட்டாற்றில் விட்டு ஓடிவிட்டான். சாதிக்கொடுமையால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் தன் மான உணர்வுடன் படை யெடுத்தவரை எதிர்த்து நிற்க முடிய வி ல் லை. பல கோவில்கள் தாக்கப்பட்டன. விக்கிரகங் களின் கைகால்கள் ஒடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சைவரும் வைணவரும் படையெடுத்தவர்க்குப் பணிவு காட்டினர். போர்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/139&oldid=678281" இலிருந்து மீள்விக்கப்பட்டது