பக்கம்:சைவ சமயம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 141

என்றவுடன் துள்ளிக்குதித்த சங்ககாலத் தமிழன்சாதி அறியாத தமிழன். மாலிக்காபூர் படை யெடுத்தபோது வாழ்ந்த தமிழன் - சாதிக் கட்டுப் பாட்டால் நசுக்கப்பூட்ட தமிழன். மூடக் கொள்கை களாலும் சாதி வெறியினுலும் சமய வெறியிலுைம் சைவ சமயம் தன் ஆற்றலை இழந்து எதிரிக்குப் பணிந்தது. சைவ சமய வரலாற்றில் இது இரங்கத் தக்கப் பகுதியாகும். பல்லவர் காலச் சைவர்கள் சமணரைக் கழுவேற்றினர் ; பிற சமயத்தாரைக் கொடுமைப்படுத்தினர். சோழர்காலச் சைவர் வைண வரோடு ஒன்றுபட்டு வாழ மறுத்தனர் : இராமாது சரைச் சோழ நாட்டிலிருந்தே விரட்டினர். இக் கொடுமைகளின் விளைவைத்தான் அயலார் படை யெடுப்பால் சைவர்கள் அநுபவித்தனர். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது சைவ வர லாற்றில் உண்மையாகிவிட்டது.

சமய மாற்றம்

சைவ சமயத்தில் சாதி என்னும் பெயரால் இழிவு படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம் ஆட்சி நிலை யானதும், இந்து சமயத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழிவிஞல், சாதி அறியாத இஸ்லாத்தைத் தழுவி னர் ; வேறு சிலர் தங்களுக்குக் கல்வியும் மருத்துவ உதவியும் மனித உரிமைகளையும் உதவிய கிறித் துவ சமயத்தைச் சார்ந்தனர். கிறித்துவ சமய மும் சாதியறியாச் சமயம். சைவர்கள் என்ற பெயருடன் பாமரராயும் விலங்குகளாயும் வாழ்க்கை நடத்திய தமிழர்கள், கிறித்துவ சமயத்தைத் தழு விக் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற லாயினர். தாம் செய்துவந்த கொடுமைகளால் தமது சமுதாயம் வலுவிழந்தது, மக்கள் மதம் மாறினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/140&oldid=678282" இலிருந்து மீள்விக்கப்பட்டது