பக்கம்:சைவ சமயம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 143

சமயத்தில் பாசி

இடித்தல், மழை பெய்தல் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளைத் தெய்வங்களின் செயல்களாகப் பண்டை மக்கள் நினைத்தனர்; தம் மனம் போன வாறு அவற்றிற்குக் கதைகள் கட்டினர். அக் கதைகள் நாளடைவில் சமயத்திற்குரிய கதைகளாக மாறிவிட்டன. இந்நாட்டவர் எகிப்து, சுமேரியா முதலிய நாடுகளோடு கடல் வாணிகத்தில் தொடர்பு கொண்ட காரணத்தால், அவ்வந்நாட்டுக் கதைகள் சில இங்கும் பரவ வழியேற்பட்டது; இந்நாட்டுக் கதைகள் அந்நாடுகளிற் பரவ வழி ஏற்பட்டது. இதனுல் சில கதைகள் பெயரளவில் வேறுபட்டும் பொருளளவில் ஒன்றுபட்டும் இம்மூன்று நாடு களிலும் காணப்படுகின்றன. இத்தகைய பல கதைகள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இடம் பெற்றுவிட்டன. இவற்றின் பயனுக, 'அன்பே சிவம்' என்பதை அடிப்படையாகக் கொண்ட சைவ சமயம், பெளராணிக சமயமாக மாறிவிட்டது. இம்மாறுதல் நாயன்மார் காலத்தில் தொடங்கியது; ஆயினும், காலப் போக்கில் பல கதைகள் சமயத்துறையில் சேர்க்கப்பட்டு, நவக் கிரக வழிபாடு போன்ற புதிய தெய்வ வழிபாடுகள் இணைக்கப்பட்டு, பெளராணிக சமயம் வளர்ச்சி பெற்றது. பாமர மக்கள் மிகுந்துள்ள இந்நாட்டில் இக்கதைகளே சமயத்தின் உயிர்நாடியாகக் கருதப் படுகின்றன. "

“In Babylonia, as elsewhere, the priests utilized the floating material from which all mythologies were framed and impressed upon it their doctrimes".-Myths of Babylonia and Assyia, p. 189, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/142&oldid=678284" இலிருந்து மீள்விக்கப்பட்டது