பக்கம்:சைவ சமயம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சைவ சமய வரலாறு

இவற்றைச் சொல்லிப் பிழைப்பவரும் பலராகி விட்டனர். இதனுல் 'அன்பே சிவம் என்ற கொள்கை பாதாளத்திற் புதைக்கப்பட்டு, அதன் மீது அறிவுக்குப் பொருத்தமற்ற கதைகள் கட்டப் பட்டன. இக்கேட்டினுல், பெரும்பாலான சைவ மக்கள் திருநீறு அணிவதோடு அமைந்தனர்; தீய பழக்கவழக்கங்களைக் கைவிட்டிலர்; சமய வர லாறும் அறிந்திலர். திருநீற்றை அணிந்து கொண்டே அடாத செய்கைகளைச் செய்யும் சைவர்கள் பெருகிவிட்டனர். தம் வீடுகளில் ஒரு மணி நேரமுதல் மூன்று மணி நேரம் சிவபூசை செய்யும் சிலர் இருக்கின்றனர். இவர்களில் பலர் ஒழுக்கமற்றவர்களாகவும் தீய வழிகளில் பொரு ளிட்டுபவராகவும், ஆனல் கோவில் திருப்பணி செய்பவர்களாகவும் காண்கின்றனர். சமயப் போர்வையில் பலர் செய்கின்ற தீய செயல்களுக்கு அளவில்லை. ஒரு சைவன் பிற சைவனிடம் அன்பு காட்ட வேண்டுமென்பதையும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதையுமே சைவர் மறந்துவிட்டனர். கல்விச் செருக்காலும் செல்வச் செருக்காலும் பதவிச் செருக்காலும் சைவர் பலர் தம் சமயத்தைச் சேர்ந்த பிறருடன் பழகுவதும் இல்லை; மதிப்பதும் இல்லை. இத் தகைய பல காரணங்களால் சமுதாயத்தில் சைவர் ஒற்றுமையின்றி வலிமை குன்றிவிட்டனர். சைவ மடங்கள்

சைவ மடங்கள் சைவ சமயத்தை வளர்ப்பதற் கென்றே ஏற்பட்டவை. நாடாண்ட மன்னரும் பிறரும் இந்நன்ளுேக்கத்திற்கே செல்வத்தையும் பல வேலி நிலங்களையும்.இம்மடங்களுக்கு உதவினர்; பல கோவில்களை இம்மடங்களின் ஆட்சியில் விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/143&oldid=678285" இலிருந்து மீள்விக்கப்பட்டது