பக்கம்:சைவ சமயம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

இந்நூலிலுள்ள பத்துக் கட்டுரைகளும் தமிழகத்தில் சைவம் வளர்ந்த வரலாற்றையும், பிற்காலத்தில் அது சீர்கெட்டதற்குரிய காரணங்களையும் வரலாறு, இலக்கிய யம், கல்வெட்டு முதலிய சான்றுகளைக் கொண்டு விளக்கு கின்றன. இவற்றை எழுதிய பேராசிரியர் மா. இராசமாணிக்கனர் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகச் சைவ சமய ஆராய்ச்சி செய்து வருபவர் ; 'பெரிய புராண ஆராய்ச்சி செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் M. O, L. பட்டம் பெற்றவர் ; தென்னிந்தியாவில் சைவ சமய வளர்ச்சி ' என்னும் ஆராய்ச்சி நூலை எழுதி டாக்டர் பட்டம் பெற்றவர் ; 1951-இல் திருவாவடுதுறை ஆதீன கர்த்தரது திருவுளப்படி திருவெண்ணெய் நல்லூ ரில் நடைபெற்ற சித்தாந்த சைவ மாநாட்டில் தலைமை வகித்தபோது, அவ்வாதீன கர்த்தரால், சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பெற்றவர்; பெரிய புராணம் வரலாற்றுச் சிறப்புடைய பெருநூல் என்பதை நாடறியச் செய்த இந்த அறிஞர், தமிழகத்தில் உள்ள பல தேவஸ்தானங் களிலும், சைவ சங்க ஆண்டுவிழாக்களிலும் சொற்பொழி வாற்றிச் சைவ உலகில் பெயர் பெற்றவர்.

இத்தகுதிகள் நிறையப் பெற்ற டாக்டர் மா. இராச மாணிக்களுர் வரைந்துள்ள இக்கட்டுரைகள், ஆராய்ச் சியை அடிப்படையாகக் கொண்டவையாதலால், சைவ உலகிற்குப் பெருவிருந்தாகும் என்று நம்புகிருேம். பொதுவாகத் தமிழ் உலகிற்கும் சிறப்பாகச் சைவவுல கிற்கும் இந்நூலை மனமுவந்து அளிக்கின்ருேம்.

காரைக்குடி, வீர. சிவராமன் 31–10–59, ) செல்வி பதிப்பகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/4&oldid=678146" இலிருந்து மீள்விக்கப்பட்டது