பக்கம்:சைவ சமயம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

' சைவ சமயம் என்னும் பெயர் கொண்ட இந்நூலில் பத்துக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. அவை சைவ சமய வரலாற்றையும், தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல் கி. பி. 18. ஆம் நூற்ருண்டு வரையில் சைவம் வளர்ந்துவந்த வரலாற்றையும், பின்பு பல காரணங்களால் சைவசமயம் தேய்ந்து வந்த வரலாற்றையும், வரலாற்றுமுறையில் தெரிவிப்பனவாகும்; இவற்ருேடு இன்று சைவம் வளரத்தகும் வழிகளையும் வகுத்துக் கூறுவனவாகும். திருமுறைகள் பன்னிரண்டு, சித்தாந்த சாத்திரங்கள் பதின்ைகு ஆகிய இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் மூன்று கட்டுரைகளில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

விருதுநகரில் சென்ற ஆண்டு (1954) நடைபெற்ற சைவ சித்தாந்த மகாசமாஜ ஆண்டுவிழாவிலும், சீகாழி, திருவையாறு தேவஸ்தானங்கள் சார்பில் இவ்வாண்டு நடைபெற்ற தேவாரப் பாடசாலை ஆண்டுவிழாக்களிலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆண்டுவிழாக்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் சாரமே இக்கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளது.

சைவ சமய வளர்ச்சியில் ஆர்வமுடைய நன்மக்கள் இக்கட்டுரைகளைப் படித்து, சைவ சமயத்தை இக்காலத் திற்கேற்ப விரிந்த சிந்தையுடனும், பரந்த நோக்கத் துடனும் வளர்க்க முற்படல் வேண்டும் என்று வேண்டு கிறேன். *

மா. இராசமாணிக்களுர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/5&oldid=678147" இலிருந்து மீள்விக்கப்பட்டது