பக்கம்:சைவ சமயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 45

பயிலப்படுகையில் மிக்க இனிமை பயக்கும். பக்திச்சுவை பொருந்திய பாடல்கள் இசைக் கருவிகளுடன் பாடப்படும்பொழுது மக்கள் உள் ளங்களைக் கவரும் என்பது உறுதி. அப்பாடல்கள் மக்களது தாய்மொழியில் பாடப்பட்டமையால், மக்கள் உள்ளங்களில் அவற்றின் பொருள் பதிந்து, பக்தியை உண்டாக்கின. விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் பண்ணிசையுடன் சிவபெரு மான் ஆடிய பலவகை நடனங்களையும் பிற நடன வகைகளையும் நடனமாதர் நடித்துக் காட்டினமை மக்கட்குச் செவி விருந்தும் விழி விருந்துமாய் அமைந்தன. இவ்விரு கலைகளும் காம இன்பத் தைப் பயப்பவை என்று சமண - பெளத்தரால் விலக்கப்பட்டவை. அம்மை - அப்பளுன மாதொரு பாகனை வழிபட்ட சைவர்கட்கு இவை வெறுப்பைத் தாராது, இன்பத்தையே தந்தன. இசையும் நடனமும் பொதுமக்களைக் கோவில்கட்கு இழுத் தன ; உள்ளங்களைக் குழைவித்தன ; கலைகளின் அருமையை உணர்த்தின; கலையே உருவான கடவுளிடம் மனத்தைச் செலுத்தின; தம்மை மறந்து ஆடவும் பாடவும் செய்தன. சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்கள் திருமூலரால் கூறப் பட்டன; அவை சிற்பங்களாகக் கைலாசநாதர் கோவிலில் காட்சியளித்தன; தேவார ஆசிரியர் காலத்தில் அவற்றை நடன மகளிர் ஆடிக் காட்டினர். இறைவனுக்கே நடராஜர் ' என்ற பெயர் உண்டெனின், அவன் சமயம் நடனக் கலையை ஒரு பகுதியாகக் கொண்டது என்பது கூருதே அமையும் அன்ருே? துறவு நிலையிலிருந்து முத்திபெறலாம்; இன் றேல், இல்லறத்தில் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/44&oldid=678186" இலிருந்து மீள்விக்கப்பட்டது