பக்கம்:சைவ சமயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பல்லவர் காலத்தில் சைவசமயம்

இருந்தன. இசையும் நடனமும் பல கோவில் களில் வளர்க்கப்பட்டன என்பது திருமுறைகளால் தெரிகிறது. இறைவன் 'ஏழிசையாய் இசைப்பய ஞய்” இருப்பவன். “பண் அவனே; 'பண்ணின் திறனும் அவனே' என்பது நாய ன் மார் கண்ட உண்மை. சமய தத்துவங்களில் உயர்ந்தது நாத தத்துவம். நாதத்திலிருந்து இசை தோன்று கிறது. இறைவனே இசை வடிவமாய் இருக்கிருன் என்பது சைவ சமயக்கொள்கை. இதனுல் இசை யோடு தோத்திரங்களைப் பாடுவதால், இறைவன் மகிழ்வான். அருள் புரிவான் என்று சம்பந்தர் கூறியுள்ளார். "தமிழோடு இசை கேட்கும் இச்சை யில் நித்தம் சம்பந்தர்க்குக் காசு நல்கினரீர்” என்று சுந்தரர் கடவுளை நோக்கிக்கூறியிருத்தல், இசையை இறைவன் விரும்புகிருன் என்பதை உணர்த்துகிற தன்ருே? இந்த விவரங்கள் கோவிலில் இசை பயிலப்பட்டதன் காரணத்தை விளக்க வல்லன.

பல கோவில்களில் நடனமாதர் இருந்து சமயத் தொடர்பான நடனங்களை ஆடினர். வீணை, கின்ன ரம், குடமுழா, கொக்கரை, முழவம், குழல். பறை, தாளம், யாழ், பிடவம், கல்லலகு, சச்சரி, கொடு கொட்டி, தக்கை, பேரி, தண்ணுமை, தகுணிதம், சங் கினை, சல்லரி, தத்தலகம், துந்துபி, மொந்தை, தண்டு, கல்லவடம், கூடரவம் முதலிய பல்வேறு இசைக் கருவிகள் கோவில்களிற் பயன்பட்டன. இவ் விவரங்களை நோக்க, இசையும் நடனமும் சைவ வழி பாட்டில் சிறப்பிடம் பெற்றன என்பது தெரிகிறது. ஆடலும் பாடலும்

இசை அனைவர் உள்ளத்தையும் உருக்க வல்லது. அது குழல், யாழ், வீணை இவற்றுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/43&oldid=678185" இலிருந்து மீள்விக்கப்பட்டது