பக்கம்:சைவ சமயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 43

ரர் உருத்திரக் கணிகையரான பரவையாரையும், வேளாளப் பெண்மணியராகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டது கவனிக்கத்தக்கது. சிவநேசச் செட்டியார் தம் மகளை மணந்துகொள்ளும்படி பிராமணரான சம்பந்தரை ேவ ண் டி ய து ம், வேளாளரான கோட்புலியார் தம் இரு பெண்களை யும் மணந்துகொள்ளும்படி ஆதி சைவரான சுந் தரரை வேண்டினமையும் கவனிக்கத்தக்கது. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண் டீர் யாம்வணங்கும் கடவுளாரே,” என்று திருநாவுக் கரசர் பாடியிருத்தல் காண்க. இவை அனைத் தையும் நோக்க, அக்காலச் சிவனடியார்கட்குள் சாதி வேற்றுமை காட்டப்படவில்லை என்பதும், பக்தி ஒன்றுக்கே மதிப்புத் தரப்பட்டது என்பதும் தெரிகின்றன. அனைவரும் கலந்து ஒன்ருய்ப் பழகுதல், பாடுதல், உண்ணுதல், உறங்குதல் சமய வளர்ச்சிக்குத் தேவையானது என்பது கருதப் பட்டது. மேலும் சாதி வேறுபாடுகள் அற்ற சம ணத்தையும் பெளத்தத்தையும் வெல்ல முயன்ற சைவத்தில் அவ்வேறுபாடுகள் இருத்தல் இழி வென்று கருதியிருத்தல் இயல்புதானே! கோவில் நிகழ்ச்சிகள்

மூவர் பாடிய திருமுறைகளை ஆராயின், பெரும்பாலான கோவில்களில் பல விழாக்கள் நடைபெற்றன என்பது தெரிகிறது. எல்லாக் கோவில்களிலும் கடவுளர் திருமேனிகள் இருந்தன என்பதும் தெரிகின்றது. சுந்தரர் காலத்தில் திரு வாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் அவருக்கு முற் பட்ட ஐம்பது நாயன்மார்கட்கு உருவச் சிலைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/42&oldid=678184" இலிருந்து மீள்விக்கப்பட்டது