பக்கம்:சைவ சமயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பல்லவர் காலத்தில் சைவசமயம்

திருவதிகைக் கோவிலில் சிவத்தொண்டு செய்து வந்தார். அப்பர் சமணத்திலிருந்து சைவராக உதவி செய்தவர் அவரேயாவர். நெடுமாறரைச் சைவ ராக்க மங்கையர்க்கரசியார் மேற்கொண்ட முயற்சி பெரிதாகும். அவரது முயற்சி இன்றேல் பாண்டிய நாட்டில் சைவம் பரவி இராது. தம்மகனை அறுத்துச் சமைக்க உடன்பட்ட சிறுத்தொண்டர் மனைவி யாரின் (வெண்காட்டு நங்கை) சமயப் பற்றுக்கு எல்லை கூற முடியுமோ? அடியார்க்குச் சமைக்க வயலில் விதைத்த நெல்லைக்கொண்டு வரும்படி யோசனை கூறிய இளையான்குடி மாறர் மனைவியார், நெல் வாங்கத் தம் தாலியைத் தந்த குங்குலியக் கலையர் மனைவியார், விளக்கெரிக்கப் பணம் வேண்டித் தம்மை விற்க உடன்பட்ட கலியநாயனர் மனைவியார் முதலிய மாதரசியர் சிவபக்தியை என்னென்பது! இத்தாய்மார்களின் ஒத்துழைப்பு இன்றேல், நாயன்மார்கள் சமயத்திருப்பணி செய் திருத்தல் இயலுமா? சைவ சமயம் நன்கு வளர இப் பெண்மணிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரண மாக இருந்ததென்பது உறுதி. . சாதிவேறுபாடு இல்லை

இக்காலத்திலுள்ள கொடிய சாதி வேறுபாடு கள் நாயன்மார் காலத்தில் பாராட்டப்படவில்லை. பிராமணரான சம்பந்தர் திருநாவுக்கரசருடைய கல்வியறிவு, அநுபவம், முதுமை, பக்தியின் சிறப்பு இவற்றைக் கருதி, அவரை அப்பரே (Father) என்றழைத்தார். பிராமணரான அப்பூதி அடிகள் வேளாளரான திருநாவுக்கரசருடன் (தம் குடும்பத் தாருடன்) இருந்து உணவுண்டார்; அப்பருக்குப் பாத பூசை செய்தார். சிவப் பிராமணரான சுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/41&oldid=678183" இலிருந்து மீள்விக்கப்பட்டது