பக்கம்:சைவ சமயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 41

சிறுத்தொண்டநாயனர் பல்லவர் சேனைத்தலைவர். கலிக்காம நாயனரும் அவர் மாமனரான மானக்கஞ் சாறரும் கோட்புலி நாயனரும் சோழர் சேனைத் தலைவர். இவ்வாறு நாடாண்ட பேரரசரும் சிற்றரச ரும் அவர்தம் சேனைத்தலைவரும் சிவநெறிச் செல்வ ராக இருந்தமையாற்ருன், சைவ சமயம் தமிழ்நாடு முழுதும் தழைத்தோங்கத் தொடங்கியது. பொது மக்களுள் எல்லா வகுப்பினருள்ளும் சிவனடியார் தோன்றினர். அறுபத்து மூவருள் பிராமண நாயன்மார்கள் பதின்ைகு பேர்; வணிக நாயன் மார் அறுவர்; வேளாள நாயன்மார் பதின் மூவர்; குருக்கள் மரபினர் நால்வர். வேட்கோவர், வேடர், இடையர், வண்ணுர், பரதவர், சாலியர், பாணர், பறையர், சான்ருர் முதலிய வகுப்புக்களிலும் நாயன்மார் தோன்றினர். இந்த விவரங்களால் சைவ சமயம் பல்லவர் காலத்தில் எல்லா வகுப்பு மக்களாலும் போற்றி வளர்க்கப்பட்டது என்பது அறியப்படும்.

அப்பர், சம்பந்தர், ஆகிய இருவரும் சமணத் தையும் பெளத்தத்தையும் வன்மையாகக் கண் டித்து நாடெங்கும் சைவ சமயப் பிரசாரம் செய் தனர். நாயன்மார் சிலர் கோவில் தொண்டுகளில். ஈடுபட்டனர்; வேறு சிலர் சிவனடியார்களுக்குத் தண்ணிர்ப்பந்தல், உணவு முதயலியவற்றை வழங் கினர். சிலர் சிவன் கோவில்களைக் கட்டினர். சிலர் அடியார்க்கு வேண்டிய உடைகளையும் பொருள்களையும் உதவினர்.

இந்நாயன்மார் வீட்டுப் பெண்மணிகள் சைவ சமயத் தொண்டுகளில் பெரு மகிழ்ச்சியோடு ஈடு பட்டனர். அப்பரது தமக்கையாரான திலகவதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/40&oldid=678182" இலிருந்து மீள்விக்கப்பட்டது