பக்கம்:சைவ சமயம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பல்லவர் காலத்தில் சைவசமயம்

தெரிகிறது. பெரிய கோவில்கள் அமிர்த கணத் தார் எனப்பட்ட குழுவினராட்சியில் இருந்தன. ஊரவையாரும் கோவிலாட்சியைக் கவனித்து வந்த னர். சில கோவில்களை, அவற்றை அடுத்திருந்த மடத்தார் கவனித்து வந்தனர். கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன. நாடோறும் பூசை கள் நடைபெற்றன. அவற்றுக்கு அரசரும் பொது மக்களும் பொருளும் நிலமும் அளித்தனர். இவ் வாறு கோவிலாட்சி சிறப்புற ந்டைபெற்றமையால் தான் அப்பரும் சம்பந்தரும் தலயாத்திரை செய்து, கோவிலையடுத்த மடங்களில் தங்திச் சைவப் பிர சாரம் செய்தல் முடிந்தது. தமக்கு வேண்டிய பட் டாடைகளையும் கோவில் பண்டாரத்திலிருந்து கொடுக்கும்படி அருள்புரியவேண்டும் என்று சுந்த ரர் நாகைக்காரோணத்தில் வேண்டியதை நோக் கக் கோவில் பண்டாரம் (பொக்கிஷசாலை) நல்ல நிலையில் இருந்தது என்பதை அறியலாம். பல்லவர் காலத்து நாயன்மார்

பல்லவர் காலத்தில் சேரமான் பெருமாள் சேர நாட்டையும், நெடுமாறர் பாண்டிய நாட்டையும் ஆண்டன்ர். மகேந்திரன் முதலிய பல்லவ வேந்தர் சோழப் பெருநாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்த்து ஆண்டனர். சோழர் முடியிழந்து பல்ல வர்க்கடங்கிய சிற்றரசராய், பழையாறையைத் தலை நகராகக் கொண்ட சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். திருக்கோவிலூரை ஆண்ட மெய்ப் பொருள் நாயனுர், திருமுனைப்பாடிநாட்டையாண்ட நரசிங்கமுனையரையர், மிழலை நாட்டையாண்ட பெருமிழலைக் குறும்பர், கொடும்பாளுரை ஆண்ட இடங்கழியார் என்பவர் சிற்றரசர் மரபினராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/39&oldid=678181" இலிருந்து மீள்விக்கப்பட்டது