பக்கம்:சைவ சமயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 39

முழுதும் மறவாத சிந்தையன்” என்றும், "பைந் தமிழை ஆய்கின்ற நந்தி” என்றும் நந்திக் கலம்ப கம் கூறுகின்றது. இப்பெருமகனையே,

"கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன், கழற்சிங்கன் என்று சுந்தரர் தமது திருத்தொண்டத்தொகையில் பாராட்டினர் என்று அறிஞர் கூறுகின்றனர். இவன் வரலாறு பெரிய புராணத்தில் வரும் கழற் சிங்க நாயனர் புராணத்துள் காணலாம். பிற்பட்ட பல்லவர்

ஆ.

மூன்ரும் நந்திவர்மன் மகளுன நிருபதுங்கன் காலத்தில் சைவசமயம் வளர்ச்சி பெற்றது. புதிய கோவில்கள் கட்டப்பட்டன. பழைய கோவில் களில் திருப்பணிகள் நடைபெற்றன. பின்வந்த அபராசிதன் காலத்தில் திருத்தணிகை வீரட்டா னேசுவரர்கோவில் கட்டப்பட்டது. இவன் தனது பக்திச் சிறப்பாலும் துறவு உள்ளத்தாலும் பெரு மானடிகள்' என்று பெயர் பெற்ருன். இவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர், சத்தியவேடு என்னும் இடத்துக் கோவில்கள் சிறப்புற்றன. இவன் மனைவியான மாதேவடிகள் சிறந்த பக்தி யுடையவள். இந்த அபராசிதைேடு பல்லவராட்சி முடிவுற்றது. கோவிலாட்சி

பல்லவர் காலக் கல்வெட்டுக்களை நன்கு ஆராயின், பல கோவில்களில் இக் காலத்திலிருப் பது போன்ற கோவிலாட்சி இருந்தது என்பது (15) 433 of 1905

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/38&oldid=678180" இலிருந்து மீள்விக்கப்பட்டது