பக்கம்:சைவ சமயம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பல்லவர் காலத்தில் சைவசமயம்

அடுத்த திருக்காட்டுப் பள்ளியில் புதிதாய்க் கட்டப் பட்ட சிவன் கோவிற்கு அச்சிற்றுாரையே தான மாக அளித்தான்; திருவதிகை வீரட்டானேசு வரர்க்குமுன் விளக்கெரிக்க 100 கழஞ்சு பொன் அளித்தான். குமார மார்த்தாண்டன் என்ற தன் விருதுப்பெயர் கொண்ட விளக்கு ஒன்றைத் திரு விடைமருதூர்ச் சிவனுக்கு அளித்தான்; திரு வொற்றியூர்ச் சிவன் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான். திருத்தவத்துறை மகாதேவர் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான்." திருக்கடைமுடி மகாதேவர்க்கு நிலதானம் செய் தான்' இவன் மனைவியருள் ஒருத்தியான மாறம் பாவையாலும் பிறராலும் இவட்ைசியில் அறங்கள் செய்யப்பெற்றவை-திருநெய்த்தானம், செந்தலை, திருவல்லம், திருக்கடைமுடி, திருப்பராய்த்துறை, குடிமல்லம், நியமம், வெண்குன்றம், என்ற இடத்துக் கோவில்கள் ஆகும்." குன்ருண்டார் கோவிலில் திருஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க ஒருவன் அரிசி தானம் செய்தான்." இவன் காலத்தில் திருவல்லம் கோவிலில் திருப்பதி கம் ஒதப்பட்டு வந்தது என்பது தெரிகிறது." இவன் சுந்தரர் காலத்தவன்

இந்நந்திவர்மன் செய்த திருப்பணிகள் அவன் சிறந்த சிவபக்தன் என்பதை உணர்த்துகின்றன. இவன் மனைவியான மாறன்பாவை பல கோவில் திருப்பணிகள் செய்தவள். இவ்வேந்தன் 'சிவனை (6) S. I. I. ii 98, (7) S. I. I. 8. 309. (8) 197 of 1907. (9) 162 of 1938. (10) 27 of 1931. (11) II of 1899. (12) 52 of 1895. 11 of 1899. S. I. I. 3 p. 93. 283 of 1901

180.of 1907, E. I. 2. p. 224, 13, 16 of 1899, 73 of 1900. (13) 347 of 1914 (14) S. I. I. 3. 93.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/37&oldid=678179" இலிருந்து மீள்விக்கப்பட்டது