பக்கம்:சைவ சமயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 37

வன், சிவனைத் தன் முடிமேல் தரித்துள்ளவன் என்று கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவற்ருல், இவன் சிறந்த சிவ பக்தன் என்பதும், சைவ சித்தாந்தத்தை நன்கு அறிந்தவன் என்பதும், தன் தந்தையைப்போலவே உருத்திராக்க மணிகளாலான லிங்கத்தை முடியில் தரித்தவன் என்பதும் விளங்குகின்றன. இப்பெரு மகன் " அசரீரி கேட்டவன் ' என்று கல்வெட்டுக் கூறுகின்றது . இக்குறிப்பு, பூசலார்நாயனர் புராண வரலாற்றுடன் தொடர்புகொண்டதாகலாம் என்று அறிஞ்ர் கருதுகின்றனர். பூசலார் வாழ்ந்த திரு நின்றவூர் (இன்றைய திண்ணனூர்ச்) சிவன்கோவி லில் பூசலார் உருவம், பல்லவன் உருவம், அவன் காலத்துத் தூண்கள் காணப்படுகின்றன. எனவே, அக்கோவில் இராசசிம்மன் காலத்தது என்று கூறுவது பொருந்தும். இவன் மனைவியும் மகனும் சிறந்த சிவபக்தர்கள் என்பதையும் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்களால் அறியலாம்.

பின்வந்த இரண்டாம் பரமேசுவரன் திருவதி கைச் சிவன் கோவிலைக்கற்றளியாக்கினன். இரண் டாம் நந்திவர்மன் காலத்தில் பல கோவில்கள் புதுப் பிக்கப்பட்டன. இவன் மகளுன நந்திவர்மன் காலத்தில் காஞ்சிபுரம்-திருமேற்றளியில் ஒரு மடம் இருந்தது மூன்ரும் கங்திவர்மன்

இவன் நந்திவர்மன் மகன். இவன் சிறந்த சிவபக்தன். தெள்ளாறு எறிந்த நந்திவர்மன், குமார மார்த்தாண்டன் எனப் பல விருதுப் பெயர் கள் இவனுக்குண்டு. இவன் பொன்னேரிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/36&oldid=678178" இலிருந்து மீள்விக்கப்பட்டது