பக்கம்:சைவ சமயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பல்லவர் காலத்தில் சைவசமயம்

f

தவன். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கற்கோ வில்களில் இருக்கும் கல்வெட்டுக்கள் இவனது சிவ நெறிப் பற்றை நன்கு விளக்குகின்றன.

இராசசிம்மன்

இவன் மேற்சொல்லப்பட்ட முதலாம் பரமேசு வரனுக்கு மகன். இவ்வரசன் கற்களை அடுக்கிக் கோவில்கட்டிப் புகழ்பெற்றவன். மாமல்லபுரம் கடற்கரையில் கூடித்திரிய சிம்ம பல்லவேசுவரம், இராசசிம்ம பல்லவேசுவரம் என்ற இரண்டு சிவன் கோவில்கள் இவளுல் கட்டப்பட்டவை. இவனுல் குடையப்பட்ட கோவில்களும் பலவாகும். இவன் கட்டிய எல்லாக் கோவில்களிலும் உலகப் புகழ் பெற்றதும் சிறந்த சிற்ப வேலைப்பாடு கொண்டதும் காஞ்சி - கயிலாசநாதர் கோவிலேயாகும், அதன் பழையபெயர் இராசசிம்ம பல்லவேசுவரம் என்பது. திருச்சுற்றுச் சுவர்களில் புராண வரலாறுகளை உணர்த்தும் சிற்பங்கள் பல இன்றும் கண்டு களிக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள சுவர் களில் பிறைகள் உள்ளன. அவற்றில் சிவனது உயர்வையும் நடனத்தையும் குறிக்கும் சிற்பங்கள் உள. சிவபெருமானுடைய பலவகை நடனங்கள் இக்கோவில் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இராசசிம்மன் காஞ்சியில்கட்டிய மதங்கீசர்கோவிலி லும் அயிராவதேசுவரர் கோவிலிலும் இத்தகைய

நடனச் சிற்பங்களைக் காணலாம்.

இராசசிம்மன் சிவசூடாமணி, சங்கர பக்தன், ஆகமபிரியன், சிவனிடம் அடைக்கலம் பூண்டவன் ரிஷப லாஞ்சனன், சைவ சித்தாந்தப்படி நடப்பு

. 5. 565 of 1912

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/35&oldid=678177" இலிருந்து மீள்விக்கப்பட்டது