பக்கம்:சைவ சமயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 35

வணக்கம் கூறும் பகுதியும் இவனது ஆழ்ந்த சிவப் பற்றை நன்கு உணர்த்துவனவாகும். *

நரசிம்மவர்மன்

மகேந்திரன் மகளுன நரசிம்ம வர்மன் சிறந்த வைணவன் ; இரண்டாம் புலிகேசியை வென்று 'மகாமல்லன்' எனப் பெயர்பெற்றவன். பெரும் பாணுற்றுப் படையில் பட்டினம் எனப் பெயர் பெற்றிருந்தது, இவன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு மகாமல்லபுரம் எனப் பெயர் பெற்றது. இவன் அம் மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் கோவில்களை (இக்காலத்தில் இரதங்கள் எனப்படுகின்றவை) அமைக்கத் தொடங்கினன். இன்று அருச்சுனன் ரதம், தர்மராசர் ரதம் என்று சொல்லப்படுபவை இவன் அமைக்கத் தொடங்கிய சிவன்கோவில்களே யாகும். திருக்கழுக்குன்றம் சிவன் கோவிலுக்குத் தன் முன்னேன் செய்த தானத்தை இவன் புதுப் பித்தான். " -

பரமேசுவர வர்மன்

மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் ரதம்,

கணேசர் மண்டபம், இராமாநுசர் மண்டபம் என் பன இப்பரமேசுவரன் அமைத்தவை. இவை மூன்றும் சிவன் கோவில்களே. இவன் காஞ்சியை அடுத்த கூரத்தில் ஒரு சிவன் கோவிலைக் கட்டி ஞன். இவன் சிறந்த சிவபக்தன் ; உருத்திராக் கத்தால் ஆன சிவலிங்கத்தை முடியாகத் தரித்திருந்

2. S. l. I. i. 33, 34; A. S. P. P. 245.

3. 65 of 1909

4, S. I. I. i. 18, 19, 20,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/34&oldid=678176" இலிருந்து மீள்விக்கப்பட்டது