பக்கம்:சைவ சமயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பல்லவர் காலத்தில் சைவசமயம்

சமணனுக இருந்து அப்பரைத் துன்புறுத்தியவன்; பின்பு சைவளுக மாறியவன்; மாறிப் பாடலிபுரத்தில் (இன்றைய திருப்பாதிரிப்புலியூரில்) இருந்த புகழ் பெற்ற சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக்கொண்டு திருவதிகை யில் தன் பெயரால் குணபரஈசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினவன். மகேந்திரன் இவ்வாறு சமயம் மாறியதை அவனது திருச்சிராப்பள்ளிக் குகைக்கோவில் கல்வெட்டும் உணர்த்துகின்றது.' இவன் வல்லம், தளவானூர், சீய மங்கலம். பல்லவபுரம் (ப ல் லா வர ம்), திருச்சிராப்பள்ளி என்னும் இடங்களில் சிவனுக்காக குகைக்கோவில் களை அமைத்தவன். ஒவ்வொரு கோவிலும் இவ்ன் விருதுப் பெயர்களுடன் ஈசுவரம் என்று முடியும். இ வ. ன் இசையிலும் நடனத்திலும் பெரும் பற்றுடையவன். இ வ. என் காலத்துச் சித்தன்னவாசல் நடிகையர் ஒவியங்கள் ஒவியப் புகழ் பெற்றவை, இசையிலும் நடனத்திலும் பெருவியப்புடைய இவன் காலத்தில் அக்கலைகள் உயர்நிலையில் இருந்தன என்பதை, இவன் காலத் தவரான அப்பர் பாடிய திருப்பதிகங்களிலும்

ór5ö了6U厂LQ。

" வேறு துறையிலிருந்து குணபரனைத் திருப்பிய ஞானம் அவளுல் ஏற்படுத்தப்பட்ட இந்த லிங்கத்தால் நாட்டில் நீண்ட காலம் பரவட்டும், “ புருஷோத்தமன் தன் மனத்தில் சிவனை உறுதி யாகப் பற்றி இருப்பவன் ' என்பனவும், குடுமி யான் மலையிலுள்ள இவனது இசை பற்றிய கல் வெட்டில், " சித்தம் நமசிவாய" என்று சிவனுக்கு 1, S. I. I. 133,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/33&oldid=678175" இலிருந்து மீள்விக்கப்பட்டது