பக்கம்:சைவ சமயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பல்லவர் காலத்தில் சைவ சமயம் (கி. பி. 300-900)

முன்னுரை

சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஏறத் தாழ அறுநூறு வருடகாலம் (கி. பி. 800-900) வரைப் பல்லவர் என்ற புதிய மரபினர் பேரரசு செலுத்தி வந்தினர். அவருள் கி. பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த பல்லவர் சிறப்புற்றவர். அவர்கட்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் தமிழகத்தில் செங்கற் கோவில்கள் கட் டப்பட்டிருந்தன. கி. பி. 4, 5, 6-ஆம் நூற்ருண்டு களில் திருமூலர், காரைக்காலம்மையார் போன்ற நாயன்மார் இருந்து சைவ சமயத்தை வளர்த்து வந்தனர். வடநாட்டிலிருந்து வந்த திருமூலர், மூவாயிரம் செய்யுட்களைக் கொண்ட திருமந்திரம் என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்நூல் அக் காலச் சைவ சமய உட்பிரிவுகளையும் கொள்கைகளை யும் நன்கு விளக்குவதாகும். மகேந்திரவர்மன்

கி. பி. 7-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் காஞ்சியை ஆண்ட மகேந்திர வர்மன் காலம் பல்லவர் வரலாற்றில் பொற்காலமாகும். இவனது காலமுதல் பல்லவராட்சி பெயரும் புகழும் பெற்றது. மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களாக்கிய கொற்றவன் மகேந்திரனேயாவன். இவன் முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/32&oldid=678174" இலிருந்து மீள்விக்கப்பட்டது