பக்கம்:சைவ சமயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சங்ககாலத்தில் சைவசமயம்

மக்கள் அணிந்திருந்தனர் என்று கலித்தொகை கூறுகிறது. சிவனுர் பெயர்கள்

சங்க கால மக்கள் இறையனர், உருத்திரன், சத்திநாதன், பெருந்தேவன், வெண்பூதி, பேரெயில் முறுவலார் முதலிய சிவனைக் குறிக்கும் பெயர்களைப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்கினர். பெருந்தேவன் என்பது மகாதேவன் என்னும் பெயர்ப்பொருளை உடையது. பேரெயில் முறுவலார் என்பது சிவன் முறுவலால் திரிபுரங்களை எரித்ததைக் குறிக்கும் |பெயராகும். வெண்பூதி என்பது திருநீற்றை அணிந்தவர் என்பதைக் குறிக்கும்.

முடிவுரை

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால், சங்க காலத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் முதலிய பல்வேறு சமயங்கள் இருந்தன என்பதும், ஆயினும், இந்நாட்டுக்கே உரியவை சைவமும் மாயோன் வணக்கமும் என்பதும், கோவில்கள் இருந்தன என்பதும், அவற்றில் விழாக்கள் நடை பெற்றன என்பதும், கடவுளர் வரிசையில் சிவ பெருமான் முதலிடம் பெற்றிருந்தான் என்பதும், வடவர் கூட்டுறவால் முருக வணக்கமும், திருமால் வணக்கமும், கொற்றவை வணக்கமும், சிவ வணக்க மும், தமிழ் வணக்கமும் ஆரிய வணக்கமும் கலந்த புதிய நிலையினை அடைந்தன என்பதும் அறிய முடிதல் காண்க. வரலாற்றுப் பேராசிரியரான T. R. சேஷ அய்யங்கார் எழுதியுள்ள, ' பண்டைத் திராவிடம்” என்னும் ஆங்கில நூலில் இவை பற்றிய விவரங்களை நன்கு காணலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/31&oldid=678173" இலிருந்து மீள்விக்கப்பட்டது