பக்கம்:சைவ சமயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 31

விள்க்குகள் வைத்து அவற்றுக்கு மாலைகள் இட்டு மக்கள் விழாக் கொண்டாடினர் என்பது அக நானுற்றுப் பாடல்களால் தெரிகின்றது.

2. திருஆதிரை விழா - இது மார்கழி விழா : என்றும் பெயர்பெறும். சிவபெருமான் ஆதிரை முதல்வன் ' எனப்பட்டான். இவ்விழாச் சிவத் தொடர்பானது. - 3. தைவிழா-தைந்நீராடல்; தத்தம் விருப் பக் கடவுளரை வணங்குதல். இதுவே பிற்கால மார்கழி நோன்பு என்று அறிஞர் கூறுவர்.

4. முருக விழா - முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்ட பெருவிழர்.

இவைபோன்ற பல செய்திகளைக் காண்பதால், சங்ககாலக் கோவில்களில் விழாக்கள் நடைபெற் றன என்பதும், திருமேனிகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன என்பதும் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்தில் இ ந் தி வி மு இருபத் தொருநாள் சிறப்பாக நடைபெற்றது. எல்லாக் கோவில்களிலும் பூசைகள் நடைபெற்றன. ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன. பல சமயப் பெரியோர்கள் தத்தம் மடங்களில் அற உபதேசம் செய்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. சமய அணிகள்

பழந்தமிழ்ப் பிள்ளைகளுக்குக் காத்தற் கடவு ளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஐந்தின் வடிவமாக அமைத்து அணிவிக்கும் அணி ஐம்படைத்தாலி எனப்பட்டது. இது போலவே சிவபிரானுடைய மழு, வாள், இடபம் இவற்றைப் போலப் பொன்னல் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/30&oldid=678172" இலிருந்து மீள்விக்கப்பட்டது