பக்கம்:சைவ சமயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சங்ககாலத்தில் சைவசமயம்

லிங்க வழிபாடு

லிங்க வழிபாடு வேதகாலத்துக்கு முற்பட்ட சிந்துவெளி மக்களிடமிருந்தது என்பது முன்னரே கூறப்பட்டது. வேத காலத்தில் இந்தியப் பழங் குடி மக்களிடத்தில் அவ்வழிபாடு இருந்தது; இதி காச காலத்தில் எல்லோரிடமும் பரவியது. லிங்கம் சிவபெருமானை மகாதேவனைக் குறிக்கும் மூர்த்த மாகக் கருதப்பட்டது. குடிமல்லம், களத்துார்: குடுமியான் மலை என்னும் இடங்களிலுள்ள லிங்கங் கள் கி. மு. இரண்டாம் நூற்ருண்டின என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். கல் லிங்கத்தைப் போலப் பலர்கூடும் பொதுவிடங்களில் (அம்பலங் களில்) மரத்துரண்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை கந்து எனப்பட்டன. அவற்றில் தெய்வ உருவங்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கள் அவற் றின்மீது மலர்களைச் சூடினர்; அவற்றின் அருகில் அவியா விளக்கு ஏற்றி வைத்தனர். அவை பீட மற்ற (ஆவுடையாரில்லாத) லிங்கங்கள் போன் றவை. இத்தகைய லிங்கங்கள் பல கோவில்களில் இருப்பதை இன்றும் காணலாம். சிவபிரான் " ஆலமர் செல்வன் ' என்று பழைய நூல்களிற் குறிக்கப்படலால், 'தென்முகக் கடவுள் வடிவம் சங்க காலத்திலேயே இருந்திருத்தல் வேண்டும் என்று கூறலாம். விழாக்கள்

1. கார்த்திகை விழா- கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளன்று இரவில் தெருக்களில் * இத்தகைய தூண்களை வழிபடும் வழக்கம் கிரீட் தீவில்

பண்டைக் காலத்திற் சிறப்புற்றிருந்தது. Origin and Spread of the Tamils, p. 50,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/29&oldid=678171" இலிருந்து மீள்விக்கப்பட்டது