பக்கம்:சைவ சமயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 29

நாட்டுக் குளங்கள் சிலவற்றில் தாமரை மலர்கள் பூத்திருக்கும். அவை தெய்வங்கட்கு உரியவை, ' எனவரும் பெரும்பாளுற்றுப் படைக் குறிப்பில்ை, அக்குளங்களை அடுத்த ஊர்களில் கோவில்கள் இருந்தமையும், கடவுளர் உருவங்கள் இருந்தமை யும் பெறப்படும். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள செங்கம், சங்க காலத்தில் செங்கண்மா எனப்பட்டது. அதனை ஆண்ட நன்னனது நவிரம் என்ற மலையில் காரியுண்டிக் கடவுள் எனப்பட்ட சிவபிரான் கோவில் இருந்தது. பண்டைக்காலக் கோவில்கள் - கோவில், நியமம், நகரம், கோட்டம் எனப் பெயர் பெற்றன. சமணர் பெளத்தர் கோவில்கள் பள்ளி' என்று வழங்கப்பட்டன. கோவில் அமைப்பு

கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும் அரசன் அரண்மனையையும் குறித்தது. இதனுல் அரசன் வாழ்ந்த அரண்மனையும் கோவிலும் ப்ல பகுதி களில் ஒத்திருந்தன என்று கொள்ளுதல் பொருந் தும். இரண்டும் சுற்று மதில்களை உடையவை; உயர்ந்த வாயில்களை உடையவை; வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை; வாயில்களுக் குத் துருப்பிடியாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன; சாந்து பூசப்பெற்ற மாடங்கள் உயரமாகக் கட்டப்பட்டிருந் தன; மேற்கூரை சாந்து வேயப்பட்டிருந்தது. சில கோவில்களில் உலோகங்களாலான கூரை களும் இருந்தன. மதுரைச் சிவன் கோவிலில் வெள்ளி வேயப்பட்ட கூரை இருந்தது. அப்பகுதி

வெள்ளியம்பலம்' என்று பெயர்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/28&oldid=678170" இலிருந்து மீள்விக்கப்பட்டது