பக்கம்:சைவ சமயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சங்ககாலத்தில் சைவசமயம்

முருகன் என்னும் கடவுளரையும் அவர்தம் நிறம், மாலை, உடை முதலியவற்றையும் பொருந்த வைத் துக் கலித்தொகையில் உவமை கூறப்பட்டுள்ளது.

பரிபாடலில் திருமாலைப் பாடிய கடுவன் இள எயினனர் என்ற புலவரே முருகனையும் வாயார வாழ்த்தியுள்ளார். கேசவன், அச்சுதன் என்ற வைணவப் பெயர்களைக் கொண்ட புலவர் இருவர் முருகனைப் பாடியுள்ளனர். பாரத்ம் பாடிய பெருந் தேவர்ை என்ற புலவர் அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு என்ற மூன்றிலும் கடவுள் வாழ்த் தாகச் சிவனையும், குறுந்தொகையில் முருகனையும், நற்றிணையில் திருமாலையும் பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் வட நாட்டு யாத்திரைக்குப் புறப் படும் முன் சிவபூசை செய்து சிவப்பிரசாதத்தைத் தன் முடியில் தாங்கியிருந்தான் ; பின்னர் வந்த திருமால் பிரசாதத்தைத் தன் தோளில் தாங்கிளுன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதே நூலில் சிவனுக்குரிய ஐந்தெழுத்தும் திருமாலுக்குரிய எட் டெழுத்தும் சம நிலையில் மதிக்கும்படி அடியவர்க் குக் கூறப்பட்டுள்ளது.

கோவில்கள்

சிவன், முருகன், திருமால், பலராமன், கொற் றவை முதலிய தெய்வங்கட்குக் காவிரிப்பூம்பட்டி னம், மதுரை, வஞ்சி போன்ற பெரிய நகரங்களில் கோவில்கள் இருந்தன. நீல நாகம் நல்கிய கலிங் கத்தை ஆலமரத்தடியில் இருந்த சிவனுக்கு ஆய் வேள் அளித்தான் என்று புறநானூறு கூறுவ தால், ஆய் நாட்டில் (பொதிகை மலைப் பகுதியில்) சிவன் கோவில் இருந்தமை தெளிவு. "தொண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/27&oldid=678169" இலிருந்து மீள்விக்கப்பட்டது