பக்கம்:சைவ சமயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 27

கண்ணகி கணவனை இழந்து நகரை விட்டுப் போகை யில், கொற்றவை கோவில் வாசலில் தன் வளையல் களை உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் குறிக் கின்றது. பிரிந்தவர் மீண்டும் வந்து சேந்தால், பின்பு பிரியாது உறைதல்வேண்டும் என்று மக்கள் கொற்றவையை வரம் வேண்டல் மரபு: கையில் காப்பு நூல் கட்டி நோன்பிருத்தல் வழக்கம். இக் கொற்றவை வணக்கமே நாளடைவில் சக்திவணக்க மாக மாறியது; சக்தியையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஒரு பிரிவு சாக்தேயம்' அல்லது வாமம் என்று பெயர் பெற்றது; சைவசமயப் பிரிவுகளுள் ஒன்ருகக் கருதப்பட்டது. சைவமும் வைணவமும்

சிவனுக்கும் முருகனுக்கும் கோவில்கள் அமைந்தவாறே, திருமாலுக்கும் த மி ழ க த் தி ல் கோவில்கள் இருந்தன. முல்லை நிலக் கடவுளான திருமால் நாளடைவில் நகரங்களிலும் கோவில் கொண்டான்; கண்ணன் அண்ணன்ை i 46) TT 10 வணக்கம் தமிழகத்தில் இருந்தது. சங்க காலத்தில் இந்நால்வர் (திருமால், பலராமன், சிவன், முருகன்) வணக்கமும் சிறப்புற்றிருந்தன. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நக் கீரர் பாடிய ஒரு செய்யுளில் அவனை இந்நால்வரு டனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார் : "நீ சினத்தில் சிவனையும், வலிமையில் பலராமனையும், பகைவரை அழிப்பதில் மாயோனையும், கருதியதை முடிப்பதில் முருகனையும் ஒப்பாவாய்.” வெள்ளை, காரி, ' ' குரால், சேய் ' என்று நிறம் பற்றி எருது களுக்கு இவ்வாறு பெயர் கூறி, அவற்றுக்கு முறையே பலராமன், மாயோன், முக்கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/26&oldid=678168" இலிருந்து மீள்விக்கப்பட்டது