பக்கம்:சைவ சமயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சங்ககாலத்தில் சைவசமயம்

உடையவன் ; தேவசேனுபதி ; மும்மூர்த்திகட்கு முதல்வன் ; வள்ளி தெய்வானையர்க்குக் கணவன் ; திரும்பரங்குன்றம் மலைமீது முருகன் கோவில் இருக்கின்றது. அக்கோவிலில் இருந்த மண்டபச் சுவர்களிலும், மேற்கூரையிலும் பல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற் றுள் இரதி, மன்மதன், பூனை உருவாகக் கொண்ட இந்திரன், அகலிகை, கெளதமன் முதலியோரைக் குறிக்கும் ஒவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பாண்டி யன் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டனர். கோவில் களில் ஆடல், பாடல்கள் நிகழ்ந்தன. பண் அமைந்த பாடல்களைப் பாடி மக்கள் முருகனை வழி பட்டனர். இவைபோன்ற செய்திகள் பரிபாடலில் காணப்படுகின்றன.

கொற்றவை வணக்கம்

தமிழ் நாட்டுப் பாலை நிலத்துத் தேவதையாகிய கொற்றவை வடவர் கூட்டுறவால் துர்க்கை எனப் பெயர் பெற்ருள் ; அதனுல் கெளரி, சமரி, முதலிய புதிய பெயர்களைப் பெற்ருள்; அவள் வேடர்களுக்கு அதி தேவதை. அவள் நஞ்சுண்டும் சாகாதவள் ; எல்லாம் உணர்ந்தவள் ; காட்டிடை வாழ்பவள் ; பேய்க்கணங்களை உடையவள்; முதலில் பாலைநிலத் தேவதையாக இருந்து வேடர் தொழுகைக்கு உரிய வளாக இருந்த கொற்றவை, பிற திணைக்குரிய தெய் வங்கள் நகரங்களிற் குடியேறிஞற்போலவே, நகரங் களிற் கோவில் கொண்டாள். மதுரை நகர மேற்கு வாயிலில் கொற்றவைக்குக் கோவில் இருந்தது.

2. T. R. Sesha Ayyangar's Ameient Dravidians.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/25&oldid=678167" இலிருந்து மீள்விக்கப்பட்டது