பக்கம்:சைவ சமயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 25

இறைவன் இருசுடர் இயமானன் ஐம்பூதம் என்ற எட்டினையும் உயிராகவும் உடம்பாகவும் உடைய வன்; கலைகளை உருவாக உடையவன் ; உலகங் களையும் உயிர்களையும் படைத்து விளையாடுபவன் ; அவற்றை அழித்து உயிர்களின் களைப்பைப் போக்குபவன் , தன்னைத் தவிரப் பெரியோன் ஒரு

வனைப் பெற்றிராதவன். அவன் ஈசானன்,' என்று பதில் கூறினன்.

முருக வழிபாடு

குறிஞ்சி நிலத்துக்கே உரிய முருகன் வடவர் கூட்டுறவால் சுப்பிரமணியன் என்றும் கார்த்தி கேயன் என்றும் சிவகுமாரன் என்றும் பெயர்பெற் ருன் அவன் கார்த்திகைப் பெண்கள் அறுவர்க் கும் பிறந்தவன் என்று பரிபாடல் கூறுகிறது.

அவன் கொற்றவை மகன், உமையின் மகன் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அப் பாடலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திரு ஆவினன்குடி, திரு.ஏரகம், பழமுதிர்சோலை, மலைகள் என்னும் ஆறிடங்கள் முருகனுக்குகந்த இடங்க ளாகக் கூறப்பட்டுள்ளன. முருக வழிபாட்டைப் பற்றிய பழந்தமிழ்ச் செய்திகளும் நாற்பத்தெட்டு வயதுவரை பிரமசரிய விரதம் காக்கும் அந்தணரது வழிபாட்டுச் செய்திகளும் திருமுருகாற்றுப் படை யுள் கூறப்பட்டுள்ள.

பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டுப் பாடல்கள் இருக்கின்றன. முருகன் சூரபத்மனே வென்றவன் ; ஆறு தலைகளையும் பன்னிரண்டு கைகளையும்

1. T. R. Sesha Ayyangar's Ancient Dravidians

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/24&oldid=678166" இலிருந்து மீள்விக்கப்பட்டது