பக்கம்:சைவ சமயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சங்ககாலத்தில் சைவசமயம்

யுடன் இமயமலைமீதுள்ளான்.இவைபோன்ற குறிப் புக்கள்தொகை நூல்களிற் காணப்படுகின்றன.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்

சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களிலும் பத்துப்பாட்டுள் ஒன்ருன மதுரைக் காஞ்சியிலும் தெய்வங்கள் வரிசையில் சிவபிரான் முதலிடம் பெற்றுள்ளான். -

" துதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்

பதிவாழ் சதுக்கப் பூதமீ. ருக” - என்பது மணிமேகலை.

பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்...” என்பது சிலப்பதிகாரம்.

சேரன் செங்குட்டுவன் சிவனருளால் பிறந்த வன், சிவபூசை செய்தவன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அவனது அவையில் சேரநாட்டுச் சாக்கையான் ஒருவன் சிவபிரான் ஆடிய கொடு கொட்டிக் கூத்தை ஆடிக்காட்டினன்,

இந்த நூல்களிலும் சிவம் என்னும் சொல் இல்லை. ஆயின். சைவம் என்னும் சொல் மணி , மேகலையில் காணப்படுகிறது.

சைவவாதி

மணிமேகலை ஒவ்வொரு மதவாதியிடமும் சென்று அவர்தம் மதக்கொள்கையையும் கடவுள் தன்மையையும் கேட்டறிந்த்ாள். அவள் சைவ வாதியிடம் சென்று, "உன் கடவுள் எத்தகையவர்?" என்று கேட்டாள். அதற்குச் சைவவாதி, ' என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/23&oldid=678165" இலிருந்து மீள்விக்கப்பட்டது