பக்கம்:சைவ சமயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 23

பத்து, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித் தொகை என்பவற்றிலும், திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாடல்களிலும் சிவனைப்பற்றிய குறிப்புக்கள் மிகப்பலவாகக் காண்கின்றன. ஆயி னும், அவற்றுள் சிவன் ' என்னும் பெயர் காணப் படவில்லை. அக்கடவுள் - தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், கறை மிடற்று அண்ணல், நீலமணி மிடற்று அண் ணல், முது முதல்வன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், மழை தலை வைத்தவன்,' புங்கம் ஊர்பவன், முக்களுன், ஆலமர் செல் வன் முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிருன். அவன் சடையிலும் மார்பிலும் கொன்றைமாலை அணிந்தவன் ; முடிமேல் பிறைச் சந்திரனைச் சூடி யவன் ; முடிமீது மேகத்தையும் கங்கையையும் தாங்கியவன் ; வேதத்தை வாயில் உடையவன் ; அதனை அந்தணர்க்குச் சொன்னவன் ; எட்டுக் கைகளை உடையவன் ; புலித்தோல் ஆடையன் ; உமாதேவியைப் பாதியாகக் கொண்டவன் , அரிய தவம் செய்பவன் ; உயிர்கட்குப் பாதுகாவலன் ; முப்புரங்களை எரித்தவன் , எரித்த அச்சாம்பலைப் பூசிக்கொண்டவன். அவன் பல வடிவங்களைக் காட் டியும் ஒடுக்கியும் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுபவன். ஊழி இறுதியில் அவன் ஆடும் கூத்து ' கொடுகொட்டி ' எனப்படும். அவன் முப்புரங்களை அழித்து ஆடும் கூத்துப் பாண்டரங்கம் ' எனப் படும். அவன் புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொன்றை மாலை தோளில் அசையப் பிரமன் தலையொன்றை ஏந்தி ஆடும் கூத்து , காபாலம் ' எனப்படும். அவன் உமையம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/22&oldid=678164" இலிருந்து மீள்விக்கப்பட்டது