பக்கம்:சைவ சமயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சங்ககாலத்தில் சைவசமயம்

பல சான்றுகளுடன் விளக்கி எழுதியுள்ளனர். அவ் விவரங்களை அறிய, சைவ சமயம் மிக்க பழைமை யுடையது என்னும் உண்மை தெரிகின்றது.

தொல்காப்பியத்தில்

பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத் தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என் னும் நிலப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். பய னுள்ள விளைச்சல் அற்ற இடம் பாலை எனப்படும். காடும் காடு சூழ்ந்த இடமும் முல்லையாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். ஒவ் வொரு நில மக்களும் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகன் வழிபடப்பட் டான். பாலைநிலத் தேவதையாகக் கொற்றவை வழி படப்பட்டாள், கண்ணன் முல்லை நில மக்களால் வழிபடப்பட்டான். மழைக்கு அதிதேவதையான இந்திான் மருதநில மக்கள் வணக்கத்துக்கு உரியவ ளுனன். கடலரசனை வருணன் நெய்தல் நில மக்களால் வழிபடப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு நிலத்திற்கும் அமைந்த தெய்வத்தைத் தவிரக் கடவுள் என்ற ஒரு பொருள் வழிபடப்பட்டு வந்த தாகவும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனல் அப் பொருள் சிவன் என்ற பெயரை உடையதாக இருந் தது என்பதற்குத் தொல்காப்பியத்தில் சான்றில்லை.

தொகை நூல்களில்

எட்டுத் தொகை நூல்கள் எனப்படும் நற் றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/21&oldid=678163" இலிருந்து மீள்விக்கப்பட்டது