பக்கம்:சைவ சமயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சங்ககாலத்தில் சைவசமயம்

(கி. மு. - கி. பி. 300)

சைவத்தின் பழைமை

சிந்து வெளி நாகரிகம் உலகிற்குத் தெரிந்தது முதல் சைவ சமயத்தின் பழைமையும் கால எல்லை கடந்து நிற்கின்றது. அங்கு அகழ்ந்து எடுக்கப் பட்ட பண்டைப் பொருள்களில் சிவ லிங்கங்கள் குறிப்பிடத்தக்கன. சிறியவும் பெரியவுமான சிவ லிங்கங்களைக் கண்ட மேட்ைடு ஆராய்ச்சியாளர் வியப்புற்று, சைவ சமயம் கணித்தறிய முடியாத பழைமை உடையது, ' என்று கூறியுள்ளனர். இந்த லிங்கங்களைப் பயன்படுத்திய சிந்துவெளி மக்கள் திராவிடரே என்பது ஆராய்ச்சியாளர் பல ரது முடிவு.

இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் இருந்த வர் முண்டர், கோலர் என்ற பண்டை இனத்தவ ரும் திராவிடருமே ஆவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இவ்விரு இனத்தவருள் லிங்க வழிபாடு எவருக்கு முதலில் உரியதாக இருந்தபோதிலும், சிந்துவெளி நாகரிக காலத்தில் திராவிட மக்களுக் கும் உரியதாக இருந்தது என்று கூறுதல் தவரு காது என்பதும் அவ்வாராய்ச்சியாளர் கருத்து. இந்த லிங்க வணக்கம் பல நாடுகளில் பரவி இருந் தது என்பதைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/20&oldid=678162" இலிருந்து மீள்விக்கப்பட்டது