பக்கம்:சைவ சமயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழகத்துக் கோவில்கள்

2. குருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும். பத்தாம் வகுப்புத் தேறியவர்க்குப் பல்கலைக் கழகத்துச் சார்பில் 4 ஆண்டுகள் வரலாறு --சமயம்-ஒவியம்-சிற்பம் - நடனம் - இசைகட்டடக் கலைகளில், ஓரளவு பயிற்சி அளித்துத் தேர்வு வைத்துப் பட்டம் தரல் வேண்டும். அப் பட்டதாரிகளே குருக்களாக அமையவேண்டும். அந்நிலையிற்ருன் கோவில்கள் சாத்திரீய முறையில் விளங்கும்; யாவும் தூய்மையாக இருக்கும். இஃது அறிஞர் உடனே செய்யத்தக்கதாகும்,

3. Gársisi Guà65 Brré (Executive Officers) வருபவர் பல் கலைகளில் புலமை உடையவராக இருத்தல் வேண்டும்.

4. இவை அனைத்திற்கும் மேலாக நம் நாடு, நம் நாட்டுக் கோவில்கள், நம் நாட்டுச் சமயங்கள், நம் நாட்டுக் கலைகள்-இவற்றைப் பாதுகாத்தலும் போற்றுதலும் வளர்த்தலும் ந ம து க ட ைம . என்பதை உளமார உணர்ந்து பாடுபடும் ஒருமைப் பாடு குருக்களிடமும் பிற (கோவில்) அலுவலரிட மும் இருத்தல் வேண்டும்.

இங்ங்ணம் யாவும் அமையுமாயின், பண்டை sig som boop @sirp asir@ (making the Past real) பேரின்பமும் பெருவாழ்வும் பெற வழியுண்டு. இம் முயற்சிக்குத் தமிழர் ஒன்றுபட்ட மனமே வேண் டற்பாலது. இஃது எப்பொழுது..கைகூடும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/19&oldid=678161" இலிருந்து மீள்விக்கப்பட்டது