பக்கம்:சைவ சமயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 19

கோவில், திருப்பாசூர்க் கோவில், திருப்புகலூர்க் கோவில், பந்தணை நல்லூர்க் கோவில் முதலிய வற்றைச் சு ற் றி லு ம் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன.

9. இவை அனைத்திற்கும் மேலாகக் கோவில் கள் ஒவிய சிற்பக் கலைகட்குத் தாயகமாக விளங்கின. இன்று நமது பழம் பெருமையை உலகிற்குக் காட்டி நிற்பன இந்த இரண்டே அல்லவா? இவற்றைத் தம் அகத்தே கொண்டுள்ள கோவில்களே இன்று நம்மைத் தலை நிமிர்ந்து

நடக்கச் செய்துள்ளன என்னல் மிகையாமோ?

இன்றைய நிலை

இங்ங்ணம் இவ்வுலக வாழ்வில் பேரின்பம் துய்த்தற்குரிய ஒப்பற்ற இடமாகக் கோவில்கள் விளங்கின. இவ்வுயரிய ேநா க் க ம் கொண்டே அவை கட்டப்பட்டன. ஆயின், நாளடைவில் அறிவற்ற-பக்தியற்ற-பழம்பெருமையும் வரலாறும் உணராத பலர் கைகளில் கோவில் ஆட்சி சென் றமையாலும், பூச்ை முதலியன உணர்ச்சியற்ற முறையில் நடைபெற்றமையாலும், பெறலாலும் கோவில்கள் தம்பொலிவிழந்து விட்டன. அவற் றைப் பண்டைச் சிறப்பில் பாதியளவிலேனும் கொண்டு நிறுத்தல் தமிழறிஞர்-சமயப் பிரியர்

நீங்காக் கடமையாகும்.

செய்யவேண்டுவன

1. சைவர் கோவில்களில் தேவாரப் பாடசாலை கள் தேவை; பெருமாள் கோவில்களில் நாலாயிரப் பிரபந்த பாடசாலைகள் தேவை; வழிபாடு தமிழிலேயே நடைபெறல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/18&oldid=678160" இலிருந்து மீள்விக்கப்பட்டது