பக்கம்:சைவ சமயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழகத்துக் கோவில்கள்

உண்டியும் உறையுளும் உதவின. அம்மடங்கட் குப் பலர் தானம் அளித்துப் பாதுகாத்து வந்தனர். 3. கோவிலை அ டு த் து மருத்துவச்சாலை இருந்தது. இதனை எண்ணுயிரம், தஞ்சாவூர்ப் பெரிய கோவிற் கல்வெட்டுக்களால் அறியலாம்.

4. நடனம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் கோவிலில் வளர்க்கப்பெற்றன. இவற்றிற் பண்பட்ட பெண்மணிகள் இருந்தனர். அவர்கள் அடிகள் மார், மா னி க் கத் தா ர், கணிகையர், உருத்திர கணிகையர் எனப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் 400 பேர் இருந்தனர்; காஞ்சி-முத்தீச்சுவரர் கோவிலில் 42 அடிகள்மார் இருந்தனர். பெருங்கோவில்களில் எல்லாம் நடன அரங்கு, இசை அரங்கு, நாடக அரங்குகள் இருந்தன. - * 5. கோவிலில் தருக்க மண்டபம், பிரசங்க மண்டபம் என்பனவும் இ ரு ந் த ன என்பது திருவொற்றியூர்க் கோவிற் கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். பாரதம், ஆகமம் போன்ற நூல்களைப் பொதுமக்கட்குப் படித்துக்காட்டக் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. -

6. கோவில் திருச்சுற்று மாளிகையில் நூல் நிலையம் இருந்தது, அது சரசுவதி பண்டாரம் எனப் பெயர் பெற்றது.

7. கோவிலில் ஊரவையார் கூடி ஊராட்சி. பற்றிய செயல்களை ஆராய்ந்தனர் ; ஊர் வழக்கு களைத் தீர்த்தனர்.

8. கோவில்கள் போர்க்காலத்தில் கோட்டை களாக விளங்கின. அதற்ைருன் தஞ்சைப் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/17&oldid=678159" இலிருந்து மீள்விக்கப்பட்டது