பக்கம்:சைவ சமயம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 17

காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட் டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற் றனவே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்ருண்டு களாக உண்டானவை. ம னி த க் குரங்கின் மண்டை ஒட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஒடு வளர்ச்சியுற்ருற்போலவே தமிழகக் கட்டடக் கலையும் வளர்ச்சிபெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனுர் கோவில் வேலைப்பாட்டைக்கொண்டும் செவ்விதின் அறியலாம். '

கோவில்கள் பயன்பட்ட வகை

1. சங்க காலத்துக் கோவில்கள் அழியக்கூடிய பொருள்களால் ஆனவை. ஆதலால் நமக்குக் க்ல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. பின்வந்த பல்ல வர்கள் கற்கோவில்களை அமைத்தனர். ஆதலின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவர்க்குப் பின் வந்த சோழர் பழைய கோவில்களைக் கற்கோவில் களாக மாற்றினர். ஆதலின் அழியா நிலையுடைய கல்வெட்டுக்கள் தோன்றின. அவை கோவில் அறப்பணிகளைக் குறிக்க எழு ந் த ன ஆயினும், அரசர், மரபு, போர்கள், அரிய செயல்கள் இன்ன பிறவும் முதலிற் பொறிக்கப்பெற்றிருந்தன. அக் குறிப்புக்களே இன்று தமிழக வரலாறு கட்ட அடிப்படையாக இருந்து உதவுகின்றன.

2. கோவிலை அடுத்துச் சமய வளர்ச்சிக்குரிய மடங்கள் இருந்தன. அவை சமயக் கல்வியைப் புகட்டின; விழாக்களைக் காணவந்த அடியார்கட்கு 16 Prof. Dubreil's ‘Dravidian Architecture, '

PP, 1–10, 22,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/16&oldid=678158" இலிருந்து மீள்விக்கப்பட்டது