பக்கம்:சைவ சமயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சோழர் காலத்தில் சைவசமயம்

மாளவம், இராசபுதனம் இவற்றை ஆண்ட மன்னர் பெரும்பாலரும் சைவரே. உச்சையினி லிருக்கும் மகாகாளர் கோவில் மிக்க சிறப்புற்றது. கெளட தேசத்துச் சிவாசாரியர் அரசர் குருமாராக

இருந்தனர்.

- பண்டில்கண்டு பகுதியை ஆண்ட சந்திராத்ரை யர் என்ற மரபினர் சிறந்த சிவபக்தர்கள். இவர் களும் தீட்சை பெற்றுத் தங்களைப் பரம மாகேசு வரர்' என்று கூறிக்கொண்டனர். இவர்கள் கல் வெட்டுக்களும் ஒம் நமசிவாய என்பதையே தொடக்கமாகக் கொண்டவை.

இராசபுதனம், பஞ்சாப் இவற்றை ஆண்ட சாக மான மன்னர்களும் சிவபக்தர்களே. இவர்தம் நாட்டில் புராணமகாதேவர் கோவில், சித்திச்சரம், கபாலீசுவரர் கோவில் என்பன சிறப்புற்றவை. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் லகுலீச பாசுபதத் துறவிகள் இருந்தனர்.

ஐக்கிய மாகாணங்களிலும் நடு மாகாணத்திலும் ஆண்ட ஹெய்ஹயர் வட இந்தியாவில் பல இடங் களை ஆண்டனர். இவருள் ஒரு பிரிவினர் கங் கைக்கும் நருமதைக்கும் இடைப்பட்ட ஒன்பது லட்சம் சிற்றுர்களைக் கொண்ட தாகள நாட்டை ஆண்டனர். அவர்தம் தலைநகர் திரிபுரி என்பது. அவர்கள் சிவநெறியில் சிறந்து விளங்கினர்; சிவா சாரியர்கட்கு மடம் கட்டித்தந்து, அவர்களையே தங்கள் குருமாராகக் கொண்டனர். கி. பி. 10-ஆம் நூற்ருண்டில் ஹெய்ஹய அரசனுக இருந்த முத லாம் யுவமகாராசன் சோணையாற்றங்கரையில் ஒரு கோவிலையும் மடத்தையும் கட்டி, சத்பாவசம்பு என்பவரிடம் ஒப்படைத்தான்; அவருக்கு மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/47&oldid=678189" இலிருந்து மீள்விக்கப்பட்டது