பக்கம்:சைவ சமயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 49

லட்சம் சிற்றுார்களையும் சமய வளர்ச்சிக்காக வழங் கின்ை. அச்சிவாசாரியரே கோளகி மடத்தை ஏற்படுத்தியவர். அவர் மரபில் வந்த சிவாசாரியர் விசுவேசுவர சம்பு என்பவர் ஹெய்ஹய அரசர் களுக்கும் காகதீய அரசர்க்கும் தீட்சாகுருவாக விளங்கினர்.

விந்த மலைக்குத் தென்பாலிருந்த இராஷ்டிர கூடர்கள் எல்லோராக் குகைகளில் கயிலாசநாதர் கோவில் போன்ற கோவில்களை அமைத்துச் சைவ வளர்ச்சிக்கு உதவி புரிந்தனர். இராஷ்டிர கூடர்க்குப் பின் வந்த சாளுக்கியர் காலத்திலும் பம்பாய் மாகாணத்தில் சைவம் ஓரளவு வளர்ச்சி யுற்றது.

இவ்விவரங்களால், சோழப் பேரரசு ஏற்பட்ட காலத்திலும் அதன் பின்னரும் சிறப்பாக வட இந்தியாவில் சைவ சமயம் நல்ல வளர்ச்சி பெற்றது என்பதை உணரலாம். இச்சூழ்நிலையே சோழ நாட்டில் சைவம் நன்கு வளரக் காரணமாயிருந்தது.

சோழர் சமய நிலை

சேர-சோழ-பாண்டியருள் சைவத்துள் மிக வும் அழுத்தமான பற்றுடையவரும் நூற்றுக்கணக் கான சிவன் கோவில்களைக் கட்டியவரும் சோழரே யாவர். அழுத்தமான சைவப் பற்றுடைய சோழர் கள் பல்லவரை முறியடித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்திய பிறரும் சைவத்தை வளர்ப்பதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர் என்பதில் வியப் பில்லை அல்லவா ?

சோழவேந்தர் துங்கபத்திரை ஆறு முதல் கன்னிமுனை வரையிலும் உள்ள தென்இந்தியாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/48&oldid=678190" இலிருந்து மீள்விக்கப்பட்டது