பக்கம்:சைவ சமயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சோழர் காலத்தில் சைவசமயம்

ஆண்டவர். சோழப்பேரரசு ஏற்படுத்திய ஆதித்தன் காலத்தில் தமிழகத்தில் பாடல்பெற்ற கோவில்கள் ஏறத்தாழ ஐந்நூறு இருந்தன. பாடல்பெருத கோவில்களும் இருந்தன. இவ்விருவகைக் கோவில் களும் சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பெற்றன. ஆதித்தன் முதலிய சோழ மன்னர் தத்தம் ஆட்சிக் காலத்தில் புதியனவாக எடுப்பித்த கோவில்கள் பலவாகும். சோழர் ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர் கள் புதியனவாகக் கட்டிய கோவில்கள் பல. அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகள் பல. சோழமாதேவியரும், சிற்றரசர் மனைவியரும், அர சாங்க அலுவலர் மனைவியரும் செய்த திருப்பணி கள் பலவாகும். துறவிகள் முதல் சாதாரண குடி மகன் ஈருக இருந்த மக்கள் செய்த திருப்பணி

கள் எண்ணில.

ஆதித்த சோழன் முதலியோர்

ஆதித்த சோழன் (கி. பி. 871-907) செய்த திருப் பணிகளுள் சிறந்தது, காவிரியின் இருகரைகளிலும் இருந்த பாடல்பெற்ற கோவில்களைப் புதுப்பித்த மையாகும். பாடல்பெற்ற கோவில்கள் அழியத்தக்க மண், மரம் முதலியவற்ருல் ஆனவை. சோழன், அவை அழியாமலிருக்க வேண்டி, அவற்றைக் கற்றளிகளாக்கினன். இங்ங்னம் ஆதித்தளுல் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சோழ அரசர் களாலும் அவர்தம் மாதேவியராலும் பிறராலும் அவர்களது ஆட்சி முடிய நடைபெற்று வந்தது என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் அறிவிக் கின்றன. சமயவளர்ச்சிக்குத் தாயகம் கோவில்கள். அவை என்றும் அழியாமல் இருந்தாற்ருன் சமயம் வளர முடியும். ஆதலாற்றன் ஆதித்த சோழன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/49&oldid=678191" இலிருந்து மீள்விக்கப்பட்டது