பக்கம்:சைவ சமயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 51

கோவில்களைக் கற்றளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான். கோவில் கருவறையும் விமானமும் கற்றளியாக மற்றப்பட்டன. இவ்வாறு ஆதித்தன் கற்றளியாக்கியதே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோவில். அஃது அவன் கால முதல் ஆதித்தேச்சரம் எனப் பெயர் பெற்றது.'

ஆதித்தன் மகனை முதற்பாாந்தகன் (கி.பி. 907-953) சிறந்த சிவபக்தன்; புலவர் புரவலன். இவன் செய்த திருப்பணிகளுள் மிக்க சிறப்புடை யது தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தது.' பராந்தகன் மூத்த மகனை இராசாதித்தன் திருநாவ லூர்க்கோவிலுள் ஒரு புதிய கோவிலைக்கட்டின்ை. இராசாதித்தன் தம்பியான கண்டராதித்தர் (கி.பி. 947-957) திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவர். அவர் திருப்பழனத்துக்குப் பக்கத்தில் கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்ற ஊரை உண்டாக்கினர்; அங்குச் சிவன் கோவிலைக் கட்டினர். செம்பியன் மாதேவியார்

இவர் கண்டராதித்தர் மனைவியார். இவர் செய்துள்ள திருப்பணிகள் இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசியும் செய்யாத அளவினவாகும். இவர் பாடல்பெற்ற கோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவக்கரை, திருமுதுகுன்றம், தென்குரங்காடுதுறை மு. த லி ய கோவில்களைக் கற்றளியாக்கினுள் ஐயாறு, தலைச்சங்காடு, ஆரூர், திருப்புறம்பியம், திருவெண்காடு முதலிய பல கோவில்களுக்கு நிலதானமும் பொன் வெள்ளிப் பாத்திரங்களும் நகைகளும் பிறவும் உதவியுள்ளார். 1, 80 of 1892, 2, A. R. E., 1906, p. 69,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/50&oldid=678192" இலிருந்து மீள்விக்கப்பட்டது