பக்கம்:சைவ சமயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சோழர் காலத்தில் சைவசமயம்

முதலாம் இராசராசன் (கி. பி. 985-1014) தன் காலம் வரையிலும் தமிழகத்தில் ஏற்பட்டி ராத பெரிய அளவில் மிக அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கோவிலை அமைத்தவன் முதலாம் இராச ராசனே ஆவன். அவன் ஆறு ஆண்டுகள் அரும் பாடுபட்டுத் தஞ்சைப் பெரிய கோவிலைக்கட்டினன். அதில் கடவுளர் திருமேனிகளையும், நாயன்மார் படிமங்களையும் எழுந்தருளச் செய்தான்; ஒவ் வொன்றுக்கும் விலையுயர்ந்த நகைகளை அளித் தான் ; பூசைக்காகவும், விழாவுக்காகவும் பல சிற்றுரர்களை மானியமாக விட்டான். அவனைப் பின்பற்றி அரச குடும்பத்தினரும் அரசாங்க அலுவலரும் மிகப் பல அறப்பணிகள் செய்தனர். தமிழ் நாட்டுப் பல கோவில்களிலிருந்து தஞ்சைப் பெரிய கோவிலில் இசை நடனக் கலைகளை வளர்க் கப் பதியிலார் நானூற்றுவர் குடியேற்றப்பட்டனர். ஒவ்வொருத்திக்கும் ஒரு வீடும், ஒரு வேலி நிலமும் தரப்பட்டன. திருப்பதிகம் ஓத நாற்பத்தெண்மர் அமர்த்தப்பட்டனர். இவ்வாறே கோவில் பணிகளை நன்கு கவனித்துச் செய்யப் பல கோவில்களில் இருந்து பலர் நியமனம் பெற்றனர். இந்த விவரங் கள் அனைத்தும் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் நன்கு அறியலாம்."

இராசராசன் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு தில்லையில் அடக்கம் செய்யப் பட்டிருந்த முதல் ஏழு திருமுறைகளைத் தொகுப் பித்தான். இவன் சிவபாத சேகரன் என்று பாராட்டப்பட்டவன். இவன்கால முதல் திருமுறை கள் நாடெங்கும் பரவலாயின. இவனைப் பின்

3, S, I I. Vol. II, parts 1-3,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/51&oldid=678193" இலிருந்து மீள்விக்கப்பட்டது