பக்கம்:சைவ சமயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 53

பற்றிய அரசரும் பிறரும் கோவில் திருப்பணிகளில் ஈடுபடலாயினர்.

முதலாம் இராசேந்திரன் (கி.பி.1012.1044) இராசராசனின் மகளுன முதலாம் இராசேந் திரன் உடையார்பாளையம் தாலுகாவில் பெரிய நகரம் ஒன்றை நிறுவின்ை. அதன் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் என்பது. அந்நகரத்தில் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலப் பெரிய சிவன் கோவில் கட்டப்பட்டது. அதுவே கங்கைகொண்ட சோழேச்சரம் என்பது. அஃது அமைப்பிலும் வேலைபாட்டிலும் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருந்தது. அப்பெருங்கோயில் இராசேந்திரன் கால முதல் சோழராட்சி வீழ்ச்சியுறும் வரையில் மிகச் சிறந்த நிலையில் இருந்தது." - முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) இவன் திருநீற்றுச் சோழன் எனவும் பரம மாகேசுவரன் எனவும் கல்வெட்டுக்களிற் குறிக்கப் படலால், தீட்சை பெற்ற சைவன் என்று அறியப் படுகிருன். இவன் காலம் முதல் வேங்கி நாட்டுத் திராட்சாராமம்-பீமேசுவரர் கோவில் சிறப்படை யத் தொடங்கியது. இவன் தில்லையில் கூத்தப் பெருமான் ஊர்வலம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தான் என்பது தில்லையுலா என்னும் நூலி லிருந்து தெரிகின்றது. சமயகுரவர் நால்வர் தேர்கள் முன் சென்றன; சேரமான் பெருமாள் வரகுண பாண்டியன் இவர்கள் சேவிப்பச் சிவபெரு மான் உலாச் சென்ருன். அனைவர்க்கும் முன்பாகக் குலோத்துங்கன் குதிரைமீது சென்ருன். தில்லைச் 4. S. I. I. Vol. Ns. 522-530 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/52&oldid=678194" இலிருந்து மீள்விக்கப்பட்டது