பக்கம்:சைவ சமயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சோழர் காலத்தில் சைவசமயம்

சிற்றம்பலத்தில் 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத் துப் பொறிக்கப்பட்ட பொன்ளுேடுகள் வேயப்பட் டிருந்தன. விக்கிரம சோழன் (கி. பி. 1120-1135)

இவன் குலோத்துங்கனுக்கு மகன். இவ்வர சன் தன் சிற்றரசர் கொடுத்த திரைப் பொருளின் பெரும்பகுதியைத் தில்லைக்கோவிலைப் புதுப்பிக்க வும் விரிவாக்கவும் செலவிட்டான் ; பொன்னம்பலம் சூழ்ந்த திருமாளிகை, கோபுரவாசல், கூடசாலைகள், பலிபீடம், தேர் இவற்றைப் பொன்வேய்ந்தான் ; தன் பெயரால் திருவிக்கிரமன் திருவீதியும் மாளி கையும் அமைத்தான் , கூத்தப்பெருமான் உலாப் போகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தான் ; பல பொன் தட்டுகள் செய்து உதவினன். இவன் ஒட்டக்கூத்தன் மாணவன் , அவரால் உலாக் கொண்டவள். இரண்டாம் குலோத்துங்கன் (கி. பி. 1133-1150)

இவன் விக்கிரம சோழனுல் தொடங்கப்பெற்ற தில்லைத் திருப்பணிகளை முடித்தவன். இவ்வேந் தன் தில்லையில் எழுநிலைக் கோபுரங்களை அமைத் தான் , அம்மனுக்குத் திருமாளிகை அமைத்தான் ; பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான். இவன் நடராசர் பாத தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இப் பெரியோன் திருவாரூர்க் கோவிலில் இருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் படிமங்கட்குப் பூசை நடக்கத் தானம் அளித்தவன். இம்மன்னன் அநபாயன் என் னும் சிறப்புப் பெயர் பெற்றவன் ; ஒட்டக்கூத்தரது மாணவன்; அவரால் உலாவும் பிள்ளைத் தமிழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/53&oldid=678195" இலிருந்து மீள்விக்கப்பட்டது