பக்கம்:சைவ சமயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 55

பாடப்பெற்றவன். சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணம் பாடச்செய்த பெருந்தகை இவனே. இரண்டாம் இராசராசன் (கி. பி. 1146-1173)

இவன் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத் தில் (இராசராசபுரத்தில்) பெரிய சிவன் கோலிலைக் கட்டினன். அதன் பெயர் இராசராசேச்சரம் என் பது. அக்கோவில் கட்டடக் கலைக்கும் சிற்ப வேலைப்பாட்டுக்கும் மிக்க புகழ்பெற்றது. இவ்வர சன் ஒட்டக்கூத்தரது மாணவன் ; அவரால் உலா விலும் தக்கயாகப் பரணியிலும் பாராட்டப்பட்டவன். மூன்ரும் குலோத்துங்கன் (கி. பி. 1178-1218)

இப்பேரரசன் திருவிடைமருதூர்க்கருகில் திரு புவன வீரேசுவரம் என்னும் பெரிய சிவன் கோவி லைக் கட்டினவன் , தில்லையில் முகமண்டபம், கோபு ரம், அம்மன் திருச்சுற்று முதலியவற்றைப் பழுது பார்த்தவன் ; பல சிவன் கோவில்களைப் பழுது பார்த்தவன். நம் தோழன் திருபுவன வீரதேவன்' என்று இவனைச் சிவபெருமான் குறிப்பிட்டதாகத் திருவாரூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. இவன் காலத்திலும் பிற்பட்ட சோழர் காலத்திலும் திரு முறைகளைப் பாதுகாக்கக் குகைகளும் சமய வளர்ச் சிக்காக மடங்களும் நாட்டிற் பெருகின. அரச மாதேவியர்

ஆதித்த சோழன் தொடங்கிய சைவத் திருப் பணிகள் அவனுக்குப் பின் வந்த சோழ வேந்தர் தொடர்ந்து வளர்த்தது போலவே, ஆதித்தன் மனைவி தொடங்கிய திருப்பணிகள் அவளுக்குப் பின் வந்த சோழமாதேவியர் தொடர்ந்து செய்யலா

5, 554 of 1904

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/54&oldid=678196" இலிருந்து மீள்விக்கப்பட்டது